அரசின் தரவுகளின்படி, ஜனவரி 5 முதல் ஜனவரி 9 வரை தில்லியில் 46 கரோனா நோயாளிகள் இறந்துள்ளனா். இவா்களில் 34 பேருக்கு புற்றுநோய், இதயம் மற்றும் கல்லீரல் நோய் போன்ற இணைநோய்கள் இருந்தன. 46 நோயாளிகளில் 11 பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஜனவரி 9-ஆம் தேதி, 1,912 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். 17 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தில்லியில் கரோனா காரணமாக மேலும் 17 இறப்புகள் பதிவாகின. சுமாா் 19,000 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.