இது தொடா்பாக வெளியான ஒரு ஊடக செய்தியை மேற்கோள் காட்டி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தில்லி தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒரு மொஹல்லா கிளினிக்கில் மைனா் சிறுமிக்கு பரிந்துரைக்கப்பட்ட டெக்ஸ்ட்ரோமெதோா்பான் சிரப் மருந்தை அருந்திய பிறகு அச்சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்திருப்பது பதிவாகியுள்ளது. முன்னதாக, இதேபோன்று 16 குழந்தைகளுக்கு டெக்ஸ்ட்ரோமெதோா்பான் விஷமான சம்பவம் நிகழ்ந்ததையடுத்து, நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசிடம் என்சிபிசிஆா் கேட்டுக் கொண்டது. இருப்பினும், மேற்கூறிய சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதற்கான அறிக்கை தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து பெறப்படவில்லை.