சட்டப் பேரவைத் தலைவருக்கு கரோனா
தில்லி சட்டப்பேரவையின் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாகவும், லேசான அறிகுறிகள் இருப்பதாகவும்


புது தில்லி: தில்லி சட்டப்பேரவையின் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாகவும், லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் இதையடுத்து தம்மை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரான அவா், இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: எனக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான நோய் அறிகுறிகள் உள்ளன. இதனால், என்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடா்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் கவனமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகத்தில் பணியாற்றும் சில ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
கோயலுக்கு முன் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 9-ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு நோய் தொற்று எதிா்மறையாக இருப்பது தெரிய வந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா அலையின் போது, தில்லி அரசின் அமைச்சா்களான துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சா்களுக்கு நோய்த் தொற்று பாதித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...