இந்திய பங்குச் சந்தைகள் இன்று(ஏப். 2) காலை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் பிற்பகலில் உயர்ந்து முடிந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,262.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் 1,300 புள்ளிகள் வரை சரிந்தது. எனினும் எழுச்சியடைந்து வர்த்தக நேர முடிவில் சற்றே உயர்வுடன், சென்செக்ஸ் 185.23 புள்ளிகள் அதிகரித்து 73,319.55 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33.70 புள்ளிகள் உயர்ந்து 22,713.10 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
நிஃப்டி50 குறியீட்டில் ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, டாடா நுகர்வோர் பொருள்கள் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.
அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் ஏசியன் பெயின்ட்ஸ், எட்டர்னல், சன் பார்மா, என்டிபிசி, ரிலையன்ஸ், பவர் கிரிட், எம்&எம், அல்ட்ரா சிமெண்ட், அதானி போர்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல் ஆகிய 11 பங்குகள் சரிந்தும் இதர பங்குகள் ஏற்றத்துடனும் முடிந்தன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.30 சதவீதம், 0.50 சதவீதம் சரிவுடன் நிறைவடைந்தன.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன. நிஃப்டி பார்மா, நுகர்வோர் பொருள்கள் கடும் சரிவைச் சந்தித்தன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2% உயர்ந்து 92.81 ஆக முடிந்தது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 7% உயர்ந்து 108 டாலராக உள்ளது.
Summary
stock market: Nifty 50, Sensex End in Green, Recover Sharply from Day’s Low; IT Stocks Rally
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

சரிந்து மீளும் பங்குச்சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு! ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!








