சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மக்கள் மனம் கவர்ந்த நடிகை! விருது வென்றார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில்!

சின்ன திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை என்ற விருதை நடிகை சரண்யா பெற்றுள்ளது குறித்து....

News image

விருதுடன் சரண்யா துராடி

இன்ஸ்டாகிராம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் தங்கமயில் பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சரண்யா துராடி, சின்ன திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை என்ற விருதை வென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நட்சத்திரங்கள், சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சரண்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சகோதர பாசத்தை அடிப்படையாகக் கொண்டுமுதல் பாகம் எடுக்கப்பட்ட நிலையில், தந்தை - மகன்கள் பாசத்தை வைத்து இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடரில் நிரோஷா, ஸ்டாலின் முத்து, வி.ஜே. கதிர்வேல், சரண்யா துராடி, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், ஆகாஷ் பிரேம்குமார், ஷாலினி பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

எதார்த்தமான பாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருவதால், பலரால் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 உள்ளது. இதுவே பலதரப்பட்ட ரசிகர்களை இத்தொடருக்கு பெற்றுக்கொண்டுத்துள்ளது.

சரண்யா துராடியும் விருதும்

சரண்யா துராடியும் விருதும்

இந்நிலையில், சின்ன திரையில் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள் மனம் கவர்ந்த நடிகை என்ற பிரிவில் சரண்யா துராடி விருது வென்றுள்ளார். இந்தியன் அவார்ட்ஸ் இந்த விருதை வழங்கியுள்ளது.

விருது பெற்ற புகைப்படங்களையும் விடியோவையும் ரசிகர்களுடன் சரண்யா பகிர்ந்துள்ளார். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.