சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இல்லத்தரசிகள் முதல் இளைம் தலைமுறையினர் வரை பலரைக் கவரும் வகையிலான தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருவதால், சினிமா நடிகர்களுக்கு இணையாக சின்ன திரை நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர்.
தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். அவர்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.
அந்தவகையில் சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த நடிகை லாவண்யா, இன்ஸ்டாகிராமில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லாவண்யா - இன்ஸ்டாகிராம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் நாயகியாக நடித்து சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா.
இந்தத் தொடரில் இவரின் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இதபிறகு வேறு எந்தவொரு தொடரிலும் நடிக்கவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். லாவண்யா பதிவிடும் புகைப்படங்கள், விடியோக்களுக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு காணப்படும்.

லாவண்யா - இன்ஸ்டாகிராம்
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக நடிகை லாவண்யா அறிவித்துள்ளார். தொழில்முறையிலான பேச்சுவார்த்தை, விளம்பரங்கள், புரமோஷன்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு லாவண்யா திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
pandian stores serial Actress Quits Instagram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









