ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தாய்லாந்து சென்ற எதிர்நீச்சல் நடிகை ஹரிபிரியா இசை!

எதிர்நீச்சல் நடிகை ஹரிபிரியா இசை தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளது குறித்து...

Ethirneechal Haripriya Isai

தாய்லாந்தில் நடிகை ஹரிபிரியா இசை - இன்ஸ்டாகிராம்

Published On :

எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஹரிபிரியா இசை, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு எதிர்நீச்சல் குழுவினருடன் கொடைக்கானல் அருகே சுற்றுலா சென்றிருந்த ஹரிபிரியா, தற்போது தோழிகளுடன் தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே நடித்து வருகின்றனர். ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்குத் திருமணம் முடிந்து வந்த மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்னைகளையுமே மையப்படுத்தி எதிர்நீச்சல் -2 எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்நீச்சலில் தேவதர்ஷினியுடன்ஹரிபிரியா

எதிர்நீச்சலில் தேவதர்ஷினியுடன்ஹரிபிரியா - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, தேவதர்ஷினி, கனிகா ஆகிய 4 பேர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வந்தனர். இதில் கனிகா விலகியதால், அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா தற்போது நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் தொடர் மக்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மை இடத்தைப் பெறுவதற்காகவும், பெருவாரியான ரசிகர்களைக் கவரும் வகையிலும் புதிய பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

தாய்லாந்தில் ஹரிபிரியா

தாய்லாந்தில் ஹரிபிரியா - இன்ஸ்டாகிராம்

எனினும், ஆரம்பத்தில் இருந்தே அனைவருக்கும் பிடித்தமான பாத்திரமாக நந்தினி (ஹரிபிரியா இசை) பாத்திரம் உள்ளது.

தாய்லாந்தில் தோழிகளுடன்...

தாய்லாந்தில் தோழிகளுடன்... - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் சுற்றுலாவுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள ஹரிபிரியா, தற்போது தாய்லாந்துக்குச் சென்றுள்ளார்.

கோடை சுற்றுலாவாக வெளிநாட்டிற்குச் சென்றுள்ள ஹரிபிரியா, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தாய்லாந்து டைரிஸ் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

Summary

Ethirneechal Haripriya Isai Go on a Tour to Thailand viral photos

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.