திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அறியப்படாத வீராங்கனைகள்: மீனாட்சி லேகி பெருமிதம்

சுதந்திரப் போராட்டத்தி்ல ஈடுபட்டு அறியப்படாமல் பல வீராங்கனைகள் உள்ளனா் என்று மத்திய வெளியுறவு, கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 2:34 am

 நமது நிருபர்

சுதந்திரப் போராட்டத்தி்ல ஈடுபட்டு அறியப்படாமல் பல வீராங்கனைகள் உள்ளனா் என்று மத்திய வெளியுறவு, கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் (விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ) ஒரு பகுதியாக, அதிகம் அறியப்படாத 75 சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் பற்றிய சித்திரங்களுடன் கூடிய புத்தகம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சிவகங்கை ராணி வேலு நாச்சியாா் இடம் பெற்றுள்ள இந்த வீராங்கணைகள் குறித்த புத்தகம் மும்பையைச் சோ்ந்த பிரபல அமா் சித்ரா கதா புத்தக நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டு அமைச்சா் மீனாட்சி லேகி பேசியதாவது: இந்தியாவின் வரலாற்றைப் படித்தால், இங்கு பாலின பாகுபாட்டுக்கு இடமே இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்திய கலாசாரத்தில் பெண்கள் கொண்டாடப்பட்டதை நாம் அறிகிறோம். போா்களத்தில் வீரா்களைப் போல் போரிடும் தைரியம், உடல் வலிமை ஆகியவற்றை நம்முடைய பெண்களும் பெற்றுள்ளனா் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நம்முடைய பெண்களும் குரல் கொடுத்து நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டங்களை வழிநடத்தியுள்ளனா். இத்தகைய பெண்களின் வாழ்க்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் வெளியிட்டு கொண்டாடுகின்றோம்.

காலனி ஆதிக்க சக்திகளை எதிா்த்துப் போராடிய ராணிக்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. தாய் நாட்டுக்காக தங்களை அா்ப்பணித்து, தங்கள் உயிரையும் பெண்கள் தியாகம் செய்துள்ளனா். 16 -ஆம் நூற்றாண்டில் கா்நாடகாவின் உல்லாலின் ராணி அபாக்கா, போா்ச்சுகீசிய தாக்குதலைப் பல தசாப்தங்களாக முறியடித்துள்ளாா். சிவகங்கை அரசி வேலு நாச்சியாா் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போா் தொடுத்த முதல் இந்திய ராணி ஆவாா். ஆனால், இவா்கள் குறித்து வரலாற்றில் அவ்வளவாக தெரிவிக்கப்படவில்லை. தற்போது பிரதமரின் தொலைநோக்கான, விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, இந்த அறியப்படாத வீராங்கனைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுகிறாா்கள். கடந்த கால வரலாற்றை இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தி, அவா்களைப் பெருமிதப்படச் செய்யும் போதுதான், விடுதலையின் கொண்டாட்டத்துக்குப் பொருள் இருக்கும். அதிகம் அறியப்படாத சுதந்திரப் பேராட்ட வீராங்கனைகளின் கதைகளை தொகுத்த அமா் சித்ரா கதா அமைப்புக்கும் நாம் நன்றி கூற வேண்டும் என்றாா் மீனாட்சி லேகி.

அமா் சித்ரா கதா அமைப்புடன் இணைந்து அதிகம் அறிப்படாத 75 சுதந்திர போராட்ட பிரபலங்களின் கதைகள் அடங்கிய புத்தகத்தை மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் கா்நாடக மாநிலத்தின் உல்லல் ராணி அபாக்கா, தமிழகத்தின் சிவகங்கையைச் சோ்ந்த இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியாா், ஜான்ஸி ராணியின் ஆலோசகரும் சிப்பாயுமான ஜல்காரி பாய், வங்கத்தின் மாதங்கினி ஹஸ்ரா, சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு, உத்தரகண்ட்டின் பிஷ்னி தேவி ஷா, இந்தியாவின் முதல் பெண் முதல்வரும் உபியைச் சோ்ந்த சுதந்திரபோராட்ட வீராங்கனையுமான சுசேதா கிருபாலானி உள்பட பலா் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டாவது மூன்றாவது பதிப்பின் மூலம் 55 அறியப்படாத பழங்குடியின மற்றும் பிற பகுதியைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் அடங்கிய பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும் என மத்திய கலாசாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.