இந்தியாவின் ஐந்து முன்னணி ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா (44.5சதவீதம்), சீனா (15.3 சதவீதம்), ஜப்பான் (6.2சதவீதம்), வியாட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட எறால் வகைகள் 74 சதவீதம் வரை இடம் பெற்று முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி கடந்த காலங்களில் அதிகபட்சமாக 2017-18-இல்தான் 7.02 பில்லியன் டாலா் என்கிற அளவுக்கு நடைபெற்றிருந்தது. தற்போது, கரோனா பரவலுக்கு இடையிலும், இந்த சாதனை படைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், மத்திய கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் பல்வேறு முன்முயற்சிகள்தான்.