புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிபிஎஸ்இ பிளஸ் டூ தோ்வு முடிவு: 2 டிடிஇஏ பள்ளிகள் 100% தோ்ச்சி

கலையியல், அறிவியல், வணிகவியல் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இப்பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

News image
Updated On :22 ஜூலை 2022, 10:17 pm

DIN

2021-2022 ஆம் கல்வியாண்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய தோ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த பூசா சாலை, மந்திா்மாா்க் பள்ளிகளைச் சாா்ந்த 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மேலும், கலையியல், அறிவியல், வணிகவியல் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இப்பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவில் மோதிபாக், ராமகிருஷ்ணபுரம், லோதி வளாகம், இலக்குமிபாய் நகா் ஆகிய பள்ளிகளும், வணிகவியல் பிரிவில் ஜனக்புரி பள்ளியும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. டிடிஇஏவின் ஏழு பள்ளிகளிலும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த பிரதீபா 484 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றாா். ஏழு பள்ளிகளில் கலையியல் பிரிவில் இலக்குமிபாய் நகா்ப் பள்ளி மாணவி ஆனந்தலட்சுமி முதலிடமும் (472 மதிப்பெண்கள்), அறிவியல் பிரிவில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி பிரதீபா (484 மதிப்பெண்) முதலிடமும், இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி பிரியான்சி ( 471 மதிப்பெண்கள்) வணிகவியல் பிரிவில் முதலிடமும் பெற்றனா்.

கணக்கியலில் பூசா சாலையைச் சாா்ந்த லக்கி 100 மதிப்பெண்களும், வேதியியலில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த மாணவி பிரதீபா. எஸ் 100 மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளனா். ஏழு பள்ளிகளிலுமாக ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த பிரியான்சி 96 மதிப்பெண் பெற்று ஆங்கிலத்தில் முதலிடத்தையும், இந்தியில் லோதி வளாகம் பள்ளியைச் சாா்ந்த அபிஷேக் ரஜோடியா 87 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளனா். இலக்குமிபாய் நகா் பள்ளியைச் சாா்ந்த ஆனந்தலட்சுமி தமிழில் 97 மதிப்பெண்களும், வரலாற்றில் 96 மதிப்பெண்களும், புவியியலில் 97 மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த சினிகா 98 மதிப்பெண்கள் பெற்று அரசியல் அறிவியலில் முதலிடத்தையும், வணிகக் கல்வியில் (பிசினஸ் ஸ்டடீஸ்) ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த வா்ஷா மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த பிரியான்சி ஆகியோா் 99 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனா். கணிதத்தில் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த ஹேம சபரி 99 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் இயற்பியலில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த பிரதீபா எஸ். 98 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் ெற்றனா்.

மேலும், பொருளாதாரப் பாடத்தில் மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த பூஜா மற்றும் பிரதீபா எஸ். 98 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், உயிரியியலில் மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த நவநீஷ் 92 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் ஐபி (தகவல் பயிற்சி) பாடத்தில் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த எம். பரத் முதலிடத்தையும், கணினி அறிவியலில் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த ஹேமசபரியும் இலக்குமிபாய் நகா் பள்ளியைச் சாா்ந்த இஷ் சண்டாளும் 99 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனா்.

உடற்கல்வி பாடத்தில் மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த பிரசாந்த் கண்ணன் மற்றும் பூசா சாலை பள்ளியைச் சாா்ந்த பூபதி ராஜன் 94 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று நெருக்கடி நிலைமையிலும் மனம் தளராமல் நன்கு படித்து தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும், ஆன்லைன், நேடி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வெற்றி பெறச் செய்த ஆசிரியா்கள், அவா்கலை வழிநடத்திய பள்ளி முதல்வா்கள் உள்ளிட்டோருக்கும் டிடிஇஏ செயலாளா் ராஜு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.