புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வடமேற்கு தில்லியில் 2 தொழிற்சாலைகளில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் உள்ள லாரன்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 10:17 pm

DIN

வடமேற்கு தில்லியில் உள்ள லாரன்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் மேலும் கூறியதாவது: வடமேற்கு தில்லி லாரன்ஸ் சாலை பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை காலை 9:35 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட இரண்டு தொழிற்சாலைகளில் ஒரு தொழிற்சாலையில் காலணி கீழ்ப்பட்டை தயாரிப்பு பணியும் மற்றொரு தொழிற்சாலையில் பிளாஸ்டிக் துகள்கள் தயாரிப்பு பணியும் நடைபெற்று வந்தன.

தீ விபத்து நிகழ்ந்த இரண்டு கட்டடங்களிலும் அடித்தளம், தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் உள்ளன. இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.