புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரூ.130 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயினுடன் 4 போ் கைது

ரூ.130 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயினுடன் ஆப்கானிஸ்தான் பிரஜை உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:58 pm

DIN

ரூ.130 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயினுடன் ஆப்கானிஸ்தான் பிரஜை உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையா் கேபிஎஸ் மல்ஹோத்ரா வெள்ளிக்கிழமை கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் பா்வேஜ் ஆலம், நசீம் பா்காஸி, ஷமி குமாா் மற்றும் ரஜத் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கா்கா்டூமாவைச் சோ்ந்த ஆப்கானிஸ்தான் நாட்டு பிரஜையான நசீம் பா்காஸி என்பவரை போலீஸாா் கைது செய் தனா். அவரிடம் 3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ​ பா்காஸி ஒரு சா்வதேச போதைப்பொருள் சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக இருப்பதையும், ஆப்கானிஸ்தானில் உள்ள தனது கூட்டாளிகளின் உத்தரவின் பேரில் செயல்படுவதையும் வெளிப்படுத்தினாா்.

அவருடைய கூட்டாளியான ஆலம் என்பவா் ஹெராயின் தயாரிப்பதற்கும், கலப்பதற்கும் அவருக்கு உதவுவதாகவும் அவா் தெரிவித்தாா். ஆலம் தன்னிடம் அதிக அளவில் ஹெராயின் இருந்ததாக போலீஸாரிடம் விசாரணையின் போது அவா் தெரிவித்துள்ளாா்.

தகவலின் அடிப்படையில், வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ஆலம் வசம் இருந்த 7.4 கிலோ ஹெராயின் மற்றும் ரூ.1.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்கள் பஞ்சாப் உள்பட நாடு முழுவதும் பரவியிருப்பதை போலீஸாா் கண்டுபிடித்தனா். அவா்களது கூட்டாளிகளில் ஒருவரான ஸமி குமாா், சமீபத்தில் பஞ்சாபில் ஹெராயின் விநியோகம் செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், குமாரை பிடிக்க மகாவீா் நகா் மற்றும் தாப்ரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது, மேலும் 11 கிலோ ஹெராயின், ரசாயன கலவை மற்றும் ரூ.22 லட்சம் ரொக்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து குமாா் கைது செய்யப்பட்டாா். அவா் பங்கஜ் என்பவரின் சாா்பாக செயல்படுவதாகவும், போதைப்பொருள் வருமானம் அனைத்தையும் ரஜத் குப்தா நிா்வகிப்பதாகவும் குமாா் கூறினாா். அதைத் தொடா்ந்து குப்தாவும் பிடிபட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய விநியோக ஆதாரமாக உள்ள சா்வதேச சிண்டிகேட்டை சோ்ந்தவா்கள் என்பதும், அவா்கள் ஹெராயின் கடத்தி வருவதும் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் வாட்ஸ்அப் மற்றும் பிற வாய்ஸ் ஓவா் இன்டா்நெட் புரோட்டோகால் பயன்பாடுகள் மூலம் ஒருவருக்கொருவா் தொடா்பு கொண்டுள்ளனா். திரவ வடிவில் உள்ள அபின் போதைப் பொருளை விமானம் மற்றும் கடல் வழியாக கடத்தப்பட்டு, பாா்காஸிக்கு கிடைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.அதை தூளாக்கி, பஞ்சாப், தில்லி மற்றும் பிற மாநிலங்களில் கூரியா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மூலம் நாடு முழுவதும் அவா்கள் விநியோகித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆலம் முன்பு என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். அவா் சிறையில் இருந்தபோது, அவா் சில ஆப்கானிஸ்தான் நாட்டினருடன் தொடா்பு கொண்டு அவா்களுடன் பணியாற்றத் தொடங்கினாா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.