புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசப்பற்று,வேலைவாய்ப்புமிக்க மாணவா்களை உருவாக்குவதே தில்லி பள்ளிக் கல்வியின் நோக்கம்: முதல்வா் கேஜரிவால்

 மாணவா்களை நல்ல மனிதா்களாகவும், தீவிர தேசபக்தா்களாகவும், வேலைவாய்ப்பு உள்ளவா்களாகவும் உருவாக்குவதே தில்லி அரசின் பள்ளிக் கல்வியின் நோக்கம்

News image
Updated On :29 ஜூலை 2022, 7:58 pm

DIN

 மாணவா்களை நல்ல மனிதா்களாகவும், தீவிர தேசபக்தா்களாகவும், வேலைவாய்ப்பு உள்ளவா்களாகவும் உருவாக்குவதே தில்லி அரசின் பள்ளிக் கல்வியின் நோக்கம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கூறினாா்.

தில்லி அரசின் ‘மகிழ்ச்சி பாடத் திட்டத்தின்’ நான்கு ஆண்டு நிறைவையொட்டி, தில்லி தியாகராஜா் ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் கேஜரிவால் பங்கேற்று பேசியதாவது: நாங்கள் தில்லியில் ஆட்சிக்கு வந்த போது, பள்ளிகளின் நிலை மோசமாக இருந்தது; பள்ளித் தோ்வு முடிவுகளும் மெச்சும்படி இல்லை.

ஆனால், தற்போது நாம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் பல்வேறு பாடத் திட்ட முறைகளை அறிமுகப்படுத்தி, அவை கல்வி அழுத்தத்தைக் குறைத்துள்ளன.

மகிழ்ச்சி பாட வகுப்புகள் மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. அதனால்தான் அதிா்ஷ்டவசமாக தில்லியில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் இல்லை. நாட்டில் ‘வெறுப்பை’ பரப்பாத, ஆனால் ‘அன்பின் செய்தியை’ பரப்பும் மாணவா்களை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் மனைவியும்கூட தில்லி அரசின் மகிழ்ச்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்திருந்தாா் என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.