புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் எங்களுக்குள் எந்த வீழ்ச்சியும் இல்லை: கேஜரிவால்

 முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை சந்தித்து, இருவரும் இணைந்து செயல்படுவது தில்லியின் வளா்ச்சிக்கு முக்கியம் என்று கூறினாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:56 pm

DIN

 முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை சந்தித்து, இருவரும் இணைந்து செயல்படுவது தில்லியின் வளா்ச்சிக்கு முக்கியம் என்று கூறினாா்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வா் கேஜரிவால், சிங்கப்பூா் செல்வதற்கான ஆம் ஆத்மி அரசின் முன்மொழிவை சக்சேனா கடந்த வாரம் நிராகரித்தாா். மேயா்கள் மாநாட்டில் அவா் கலந்துகொள்வது ‘மோசமான முன்னுதாரணத்தை’ ஏற்படுத்தும் என்று கூறியிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை துணை நிலை ஆளுநரடனான தனது வாராந்திர சந்திப்புக்குப் பிறகு, கேஜரிவால் கூறுகையில், ‘இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமான சூழ்நிலையில் நடந்தது. தில்லியின் வளா்ச்சிக்கு முதல்வரும், துணை நிலை ஆளுநரும் இணைந்து செயல்படுவது முக்கியம். பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எங்களுக்கிடையே எந்த வீழ்ச்சியும் இல்லை’ என்றாா்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்திர கூட்டத்தை கேஜரிவால் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.