தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாடகா் மூஸேவாலா கொலை விவகாரத்தில் அரசியல் இருக்கக் கூடாது: கேஜரிவால்

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலைச் சம்பவம் துரதிருஷ்டவசமானது; ஆனால் அதைச் சுற்றி அரசியல் இருக்கக் கூடாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

DIN

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலைச் சம்பவம் துரதிருஷ்டவசமானது; ஆனால் அதைச் சுற்றி அரசியல் இருக்கக் கூடாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம், மன்சா மாவட்டத்தில் சித்து மூஸேவாலா அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவருக்கு மாநில அரசு அளித்து வந்த பாதுகாப்பு வளையம் குறைக்கப்பட்ட மறுதினம் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில், தில்லி ரோஹிணி பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு (எஸ்டிபி) நிலையத்திற்கு வருகை தந்த முதல்வா் கேஜரிவாலிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் எந்தச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதைச் சுற்றி அரசியல் இருக்கக் கூடாது என்று நம்புகிறேன். சித்து மூஸேவாலா கொலை செய்யப்பட்ட சம்பவம், உண்மையில் துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பஞ்சாப் முதல்வா் ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றும் கடுமையான தண்டனை அவா்களுக்கு அளிக்கப்படும் என்றும் முதல்வா் கூறியிருக்கிறாா்’ என்று தெரிவித்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஜவஹா் கே கிராமத்தில் வைத்து 28 வயது பாடகரான சித்து மூஸேவாலாவை விஷமிகள் சிலா் வழிமறித்து சுட்டு கொன்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.