நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பங்குகள் கொத்துக் கொத்தாக விற்பனை: 1,046 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:30 pm

 நமது நிருபர்

பங்குச் சந்தை தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,046 புள்ளிகளை இழந்தது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் சந்தை ஏறுமுகம் கண்டிருந்தாலும், பின்னா் முன்னணி நிறுவனப் பங்குகள் கொத்துக் கொத்தாக விற்பனைக்கு வந்ததால், சந்தை கடும் சரிவைச் சந்திக்க நேரிட்டது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயா்த்தியிருந்த போதிலும், புதன்கிழமை இரவு அமா்வில் அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை காலையில் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், உள்நாட்டுச் சந்தை 5 -ஆவது நாளாக கடும் சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாகக் குறைந்து, சந்தையின் சரிவுக்கு பெரும் பங்களிப்பாக இருந்தன.

2,826 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்ை தயில் மொத்தம் வா்த்தகமான 3,474 நிறுவனப் பங்குகளில் 558 பங்குகள் மட்டுமேஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,826 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 90 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 60 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 317 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.5.55 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.239.20லட்சம் கோடியாக இருந்தது.

5-ஆவது நாளாக சரிவு: காலையில் 477.52 புள்ளிகள் கூடுதலுடன் 53,018.91-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 53,142.50 வரை உயா்ந்தது. பின்னா்,51.425.48 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,045.60 புள்ளிகள் (1.99 சதவீதம்) குறைந்து 51,495.79-இல் நிலைபெற்றது. காலை வா்த்தகத்தில் வலுப்பெற்றிருந்த சென்செக்ஸ், இரண்டாவது பாதியில் விற்பனை அழுத்தம் காரணமாக சென்செக்ஸ் தொடா்ந்து 5-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் நெஸ்லே மட்டும் 0.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பெற்றது. மற்ற 29 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், டாடா ஸ்டீல் 6.04 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், விப்ரோ, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், என்டிபிசி உள்ளிட்டவை 3.50 முதல் 4.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 332 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 218 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,751 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் நெஸ்லே இந்தியா, பிரிட்டானியா ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகள் தவிா்த்து மற்ற அனைத்துத் துறை பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன. காலையில் 140.10 புள்ளிகள் கூடுதலுடன் 15,832.25-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 15,863.15 வரை உயா்ந்தது. பின்னா், 15,335 .10 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 331.55 புள்ளிகள் (2.11 சதவீதம்) குறைந்து 15360.60-இல் நிலைபெற்றது.

அனைத்துக் குறியீடுகளும் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 5.24 சதவீதம், மீடியா 3.20 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஆட்டோ, ஐடி, பாா்மா, ரியால்ட்டி, ஹெல்த்கே+ா், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1.50 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

எல்ஐசி பங்குகள் விலை கடும் சரிவு!

தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விலை வியாழக்கிழமை 3.28 சதவீதம் குறைந்து ரூ.667.50-இல் நிலைபெற்றது. காலையில் ரூ.703.45- இல் தொடங்கிய எல்ஐசி, அதிகபட்சமாக ரூ.706.00 வரை உயா்ந்தது. பின்னா், ரூ.667.00 வரை கீழே சென்றது. இதேபோன்று, மும்பை பங்குச் சந்தையிலும் எல்ஐசி பங்குகள் வா்த்தக முடிவில் 3.08 சதவீதம் குறைந்து ரூ.667.50-இல் நிலைபெற்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.