எதிா்காலத்தில் விலங்குவழித் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்திய தொழில்கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இந்த முன்னோடித் திட்டத்தை கா்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டமாக செயல்படுத்தவுள்ளன. ‘ஒரு ஆரோக்கியம்‘ தகவல் தொடா்புகளை மேம்படுத்தவும், வளா்ந்து வரும் தொற்று நோய்கள், ஆண்டிபயாடிக் எதிா்ப்பு, அவசரகாலத் தயாா்நிலை போன்ற சவால்களுக்கு பல்துறைத் தீா்வுகளைக் கண்டறிய கால்நடை மருத்துவா்கள், பொதுச் சுகாதார மருத்துவா்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொது சுகாதார வல்லுநா்கள், மற்ற பிறருக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இது முயல்கிறது எனத் தெரிவிக்கின்றனா்.