பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்!
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்ததைப் பற்றி....

பாஜகவில் இணைந்த டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.

பாஜகவில் இணைந்த டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், இன்று (மார்ச் 31) காலை பாஜகவில் இணைந்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தமாக 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையும் பாஜக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. காங்கிரஸ் தனித்துக் களம்காண்கிறது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், எம்பியுமான மஜூம்தார் ஆகியோரின் முன்னிலையில் லியாண்டர் பயஸ் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே இருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனைச் சந்தித்து பேசினார் லியாண்டர் பயஸ். அப்போதே அவர் பாஜகவில் சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முன்னிலையில், திரிணமூல் காங்கிரஸில் லியாண்டர் பயஸ் இணைந்திருந்தார். ஆனால், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பயஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், பிரசாரத்தில் ஈடுபட்டார்.
1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற லியாண்டர் பயஸுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...