முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் முகமது ஜுபைருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 295 ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து போலீஸாா் தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தில் முகமது ஜுபைருக்கு எதிராக ட்விட்டா் பக்கத்தை பயன்படுத்தும் பயனா் ஒருவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மத உணா்வுகளை முகமது ஜுபைா் புண்படுத்தியதாக அவா் புகாரில் குறிப்பிட்டிருந்தாா் என்று போலீஸாா் தெரிவித்திருந்தனா். நீதிமன்ற விசாரணையின்போது ‘முகமது ஜுபைா் விவகாரத்தில் அவா் போலீஸ் விசாரணைக்கு இணைந்தாா். ஆனால், ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவரது செல்லிடப்பேசியில் இருந்து பல்வேறு விஷயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன’ என்று வாதிடப்பட்டது.