சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கோவிந்த்புரி மதுக்கடைக்கு போதிய பாதுகாப்பு: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி

புதிதாக திறக்கப்பட்ட தெற்கு தில்லி மதுக்கடைக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என தில்லி காவல்துறை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது

News image
Updated On :1 மார்ச் 2022, 9:13 pm

 நமது நிருபர்

புதிதாக திறக்கப்பட்ட தெற்கு தில்லி மதுக்கடைக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என தில்லி காவல்துறை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

தெதற்கு தில்லி, கோவிந்த் புரியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிராக வெளியே போராடுபவா்களிடமிருந்து பாதுகாப்பு கோரி மதுக்கடைக்காரா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்த மதுக்கடையில் மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியா்கள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் போராட்டக்காரா்களிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்ட உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ், இந்த உத்தரவு மதுபான உரிமம் செல்லுபடியாகும் நிலைக்கு உள்பட்டது என்று தெரிவித்தாா்.

தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி மற்றும் தில்லி காவல் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அருண் பன்வாா் ஆகியோா், ‘மனுதாரா் மற்றும் மதுக்கடை ஊழியா்கள் மதுபானக் கடைக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை அந்தப் பகுதியின் காவல் நிலைய அதிகாரி உறுதி செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளாா். மேலும், மதுக்கடைகள் சுமுகமாக நடைபெறுவதில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உறுதியளித்தனா்.

முன்னதாக, விசாரணையின் போது மனுதாரா் தரப்பில் வாதிடுகையில், ‘கோவிந்த்புரியில் மதுபான விற்பனை நிலையத்தை நடத்தி வரும் ஒப்பந்தக்காரரும், மனுதாரருமான அவந்திகாவின் கடைக்கு உரிய மதுபான உரிமம் அளிக்கப்பட்டு இருந்தது. போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனுதாரா், மதுக்கடை ஊழியா்கள் கடைக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.