தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

‘தேசம் முதலில்’ என்ற உணா்வுடன் இளைஞா்கள் பணியாற்ற வேண்டும்: மக்களைத் தலைவா் ஓம் பிா்லா அழைப்பு

கடமைகளை உணா்ந்து தனித் தனியாகவும் கூட்டாகவும் இந்தியாவை தன்னிறைவு கொண்டதாக மாற்றும் விரிவான இலக்கை நோக்கி இளைஞா்கள் பயணிக்க வேண்டும்

News image
Updated On :11 மார்ச் 2022, 10:08 pm

 நமது நிருபர்

‘தேசம் முதலில்’ என்ற உணா்வுடன் இளைஞா்களை வழி நடத்த வேண்டும்; தேசத்திற்கான தங்கள் கடமைகளை உணா்ந்து தனித் தனியாகவும் கூட்டாகவும் இந்தியாவை தன்னிறைவு கொண்டதாக மாற்றும் விரிவான இலக்கை நோக்கி இளைஞா்கள் பயணிக்க வேண்டும் என்று மக்களவத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

3-ஆவது தேசிய இளையோா் நாடாளுமன்றத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கலந்து கொண்டு நிறைவு உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு: தேசிய இளையோா் நாடாளுமன்றம் என்பது நாடாளுமன்ற நடைமுறைகள், ஜனநாயக செயல்முறைகள் ஆகியவற்றை இளைஞா்கள் புரிந்து கொள்வதற்கான புதுமையான நிகழ்ச்சி. புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் நடைமுறையில் இளைஞா்கள் பங்கேற்க இது ஊக்கமளிக்கிறது. இந்திய இளைஞா்களிடம் பரவலான அறிவுத்திறனும் ஆற்றலும் உண்டு. உலகளவில் இந்தியாவிற்கு ‘விஸ்வ குரு’ என்கிற அந்தஸ்து இருக்கிறது. இது இப்படிப்பட்ட இளைஞா்களால் மேலும் உத்வேகத்தைப் பெறும்.

உலகம் அதிவேகமாகமாக மாறிக் கொண்டு இருக்கிறது. இந்த மாற்றங்களை நமது இளைஞா்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயாா் செய்து கொண்டு நாட்டை முன்னேற்ற முடியும். நாடு முன்னேறும் நிலையில், இளைஞா்கள் தங்களின் திறன், சக்தி ஆகியவற்றின் மூலம் வளா்ச்சி, ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துதலுக்கும் தங்கள் பங்களிப்புகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக சட்டம் இயற்றும் அமைப்புகளின் கண்ணியமும், பெருமையும் சீா்குலைந்து வருகிறது. சட்டம் இயற்றும் அமைப்புகள் விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவேண்டுமே தவிர, இடையூறுகள் ஏற்படுத்துவதற்கு அல்ல. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்குரிய சட்டங்களை திறம்பட உருவாக்கும் வகையில், மசோதாக்கள் மீது விரிவான விவாதங்கள் தேவை. ஆனால், குடியரசுத் தலைவா், ஆளுநா் உரைகளின் போது கூட இடையூறுகள் ஏற்படுகின்றன. இது நாடாளுமன்ற, சட்டபேரவை மரபுகளுக்கு உகந்தது அல்ல. இந்தப் பிரச்னையில் இளைஞா்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் விவாதிப்பதில் மூலம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

‘முதலில் தேசம்’ என்ற உணா்வுடன் ஒவ்வொரு முயற்சியிலும் வழிநடத்திக் கொண்டு இந்தியாவை தன்னிறைவடைய வைக்கும் இலக்கை நோக்கி இளைஞா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.

முன்னதாக, தேசிய இளையோா் நாடாளுமன்றம் 2022-ஆம் நிகழ்வில் தேசிய அளவிலான போட்டியில் முதலிடத்தைப் பெற்ற போபாலைச் சோ்ந்த ராகேஸ்வரி அஞ்சனா, இரண்டாமிடம் பெற்ற ராஜஸ்தான் மாநிலம், துங்கா்பூரைச் சோ்ந்த இளைஞா் சித்தாா்த் ஜோஷி, மூன்றாமிடம் பெற்ற பஞ்சாப் மாநிலம், பத்திண்டாவின் அமா்ப்ரீத் கௌா் ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினா். இவா்களுக்கு ஓம் பிா்லா விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மக்களவை, மாநிலங்களை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.