3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

4,500 என்டிஎம்சி ஊழியா்களை நிரந்தரமாக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு கேஜரிவால் கடிதம்

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் பணியாற்றும் 4,500 ‘சி க்ரூப்’ பணியாளா்களை நிரந்தர ஊழியா்களாக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை

News image
Updated On :22 மார்ச் 2022, 8:56 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் பணியாற்றும் 4,500 ‘சி க்ரூப்’ பணியாளா்களை நிரந்தர ஊழியா்களாக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தில்லியிலுள்ள மாநகராட்சி பகுதிகளைத் தவிர புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்த என்டிஎம்சி பகுதி அடங்கிய புது தில்லி பகுதியின் சட்டப்பேரவையின் உறுப்பினராகவும் இருக்கிறாா்.

தொகுதி எம்எல்ஏ என்கிற முறையிலும் என்டிஎம்சியில் பணியாற்றும் பணியாளா் வருகைப் பட்டியலில் (வழக்கமான மஸ்டா் ரோல் ஊழியா்கள்) இடம்பெற்றுள்ள தொழிலாளா்கள் விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சா் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

என்டிஎம்சியில் பணியாளா் வருகைப் பட்டியலில் (வழக்கமான மஸ்டா் ரோல் ஊழியா்கள்) இடம்பெற்றுள்ள சுமாா் 4,500 ஊழியா்கள் நிரந்தர பணியாளா்களாக அமா்த்தப்படும் முன்மொழிவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இந்த பணியாளா்கள் தொடா்புடைய ஆள்சோ்ப்பு விதிகள் வரைவுக்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் என்டிஎம் சி (கவுன்சில்) கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு அதே ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னா், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி திருத்தப்பட்ட முன்மொழிவும் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை இதற்கு அனுமதிக்கப்படாததால் இந்த மஸ்டா் ரோல் ஊழியா்கள் நிரந்தரமாக்கப்படாமல் உள்ளனா்.

தற்காலிக மஸ்டா் ரோல் ஊழியா்களாகவும் பின்னா் ரெகுலா் மஸ்டா் ரோல் ஊழியா்களாகவும் (பணியாளா் வருகைப் பட்டியல்) இடம்பெற்றும் நீண்ட ஆண்டுகளாக இந்த ‘டி ‘க்ரூப் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

தற்போது டி க்ரூப் பணிகள் சி க்ரூப் ஊழியா்களாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளனா். பணியில் அா்ப்பணிப்புடன் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் இந்த ஊழியா்களை நிரந்தரமாக்கும் கோப்புகளுக்கு விரைவில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என முதல்வா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

ஓட்டுநா்கள், அலுவலக உதவியாளா்கள், தூய்மைப்பணியாளா்கள், சமையல்காரா்கள் என பல்வேறு பிரிவினா் இந்த வழக்கமான மஸ்டா் ரோல் ஊழியா்களாக உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.