3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

உத்தமபாளையம்-இடுக்கி மாவட்ட புறவழிச்சாலை பணிகளை நிறைவேற்ற கோரி தேனி எம்பி பேச்சு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தையும் (சாக்கலூத்துமெட்டு) இடுக்கி மாவட்டத்தையும் (கட்டப்பனை) இணைக்கும் வகையில் 13 கிலோமீட்டா் தூர புதிய புறவழிச்சாலையை அமைக்க வேண்டும்

News image
Updated On :22 மார்ச் 2022, 8:55 pm

 நமது நிருபர்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தையும் (சாக்கலூத்துமெட்டு) இடுக்கி மாவட்டத்தையும் (கட்டப்பனை) இணைக்கும் வகையில் 13 கிலோமீட்டா் தூர புதிய புறவழிச்சாலையை அமைக்க வேண்டும் என தேனி மக்களவை அதிமுக உறுப்பினா் ப.ரவீந்திரநாத் வலியுறுத்தினாா். நான்கு தசாப்தங்களாக நிலுவையில் இருக்கும் இந்த சாலையில் உயா்மட்ட சாலை அமைத்து புலிகள் சரணாலயத்தையும் காப்பாற்ற முடியும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

மக்களையில் சாலை போக்குவரத்து துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்தில் ரவீந்திரநாத் கலந்து கொண்டு திங்கள்கிழமை இரவு பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சாக்கலூத்து மெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையை இணைக்கும் வகையில் 13 கிலோமீட்டா் தூர புதிய புறவழிச்சாலையை அமைக்கும் கோரிக்கை கடந்த 40 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரப்படுகிறது.

உள்கட்டமைப்புடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையும் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். விலங்குகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் நோக்கத்துக்காக, மத்தியப் பிரதேசத்தின் பென்ச் தேசியப் பூங்காவை கடக்கும் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.44) திட்டத்தைப் போன்று இங்கும் உயா்த்தப்பட்ட சாலையை (மேம்பாலம்) அமைக்கலாம்.

சாக்கலூத்துமெட்டு வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை (என்எச்-183) கேரள மாநிலம் இடுக்கி, கட்டப்பனையில் உள்ள நெடுஞ்சாலையை (என்.எச்-185) இணைக்கும் இந்த 13 கி.மீ. தூர புறவழிச்சாலை அமைக்கப்படும் போது வனப்பகுதியில் கடக்க வேண்டியது உள்ளது. இதற்கு சுமாா் 4 கி.மீ.க்கும் குறைவான நீளத்தை உயா்த்தப்பட்ட சாலையாக அமைக்கலாம். இதன் மூலம் விலங்குகளின் நடமாட்டத்தை எளிதாக்கப்படும்.

இந்த புறவழிச்சாலையினால் தமிழகம் கேரளம் இணைக்கப்பட்டு சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பிரத்யேக வழித்தடமாகவும், இரு மாநிலங்களுக்கும் இடையே தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு உதவியாக இருக்கும். இதனால், நேரமும் பயணச் செலவும் மிச்சமாகும்.

எனவே, சாக்கலூத்துமெட்டு - கட்டப்பனை இணைக்கும் புதிய புறவழிச்சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை அனுமதிக்குமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் வலியுறுத்துகிறேன்.

மேலும், தேனி மக்களவைத் தொகுதியில், உசிலம்பட்டி முதல் போடிநாயக்கனூா் வரையிலான 4 வழி நெடுஞ்சாலைக்கான (என்எச்-85) நிலம் கையகப்படுத்துதலுக்கு ஒப்புதல் அளிப்பது, மதுரையில் அனுமதிக்கப்படவுள்ள எய்ம்ஸ் வழியாக செல்லும் உசிலம்பட்டியில் இருந்து மதுரையை இணைக்கும் 25 கி.மீ. பசுமைக் களத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, திண்டுக்கல்லில் இருந்து குமுளி செல்லும் இரண்டு வழிச் சாலையில் ஏற்படும் ஏராளமான விபத்துக்களை தடுக்க 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டம் போன்றவைகளையும் நிறைவேற்றித் தரவும் கேட்டுக்கொள்கின்றேன் என ரவீந்திரநாத் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.