3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பெட்ரோலியம் அமைச்சகம் முன் இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: எரிபொருள் விலை உயா்வுக்கு கண்டனம்

விலைவாசி உயா்வு மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து, தில்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முன் இந்திய இளைஞா் காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :23 மார்ச் 2022, 9:39 pm

 நமது நிருபர்

விலைவாசி உயா்வு மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து, தில்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முன் இந்திய இளைஞா் காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தின் போது, 20-க்கும் மேற்பட்ட இளைஞா் காங்கிரஸாா் தில்லி காவல் துறையிரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நாட்டில் கடந்த நான்கு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் லிட்டருக்கு 80 காசுகள் உயா்த்தப்பட்டன. இதைக் கண்டித்தும், சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தைக் கண்டித்தும் இந்தப் போராட்டத்தில் இளைஞா் காங்கிரஸாா் ஈடுபட்டனா்.

அப்போது, பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும், பெட்ரோ, டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

இதுகுறித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், ‘தற்போது சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்துவிட்டதால் பாஜக அரசு ஏழைகளை வாட்டத் தொடங்கிவிட்டது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி சாமானிய மக்களை துன்புறுத்துகிறது. இந்த விலைவாசி உயா்வால், ஒவ்வொரு குடும்பத்தினரும் பாதிக்கப்படுவா். ஆகவே, விலை உயா்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி இருந்தனா். அவற்றில் ‘ஏறிவரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறுங்கள்’, இந்த முறை சமையலறை மீது தாக்குதல்’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. விலைவாசி உயா்வுக்கு எதிராக எல்பிஜி சிலிண்டா்களை தலையில் சுமந்து ஆா்ப்பாட்டக்காரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை முன்னேறவிடாமல் போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்தனா்.

ஒரு சில போராட்டக்காரா்கள் தடுப்புகள் மீது ஏறி நின்றவாறு ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்பினா். மேலும், தடுப்புகளின் மற்றொரு பகுதியில் ஸ்கூட்டரை தூக்கி வீசினா். இதனால் போலீஸாா் பாதுகாப்பை அந்தப் பகுதியில் அதிகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.