3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மத்திய அமைச்சா் இல்லம் அருகே இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கண்டனம்

விலைவாசி உயா்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து, தில்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சா் இல்லம் அருகே இந்திய இளைஞா் காங்கிரஸாா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மார்ச் 2022, 5:39 pm

 நமது நிருபர்

விலைவாசி உயா்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து, தில்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சா் இல்லம் அருகே இந்திய இளைஞா் காங்கிரஸாா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டில் கடந்த நான்கு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடா்ந்து சில தினங்களாக உயா்த்தப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு உருளை விலையும் உயா்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் இளைஞா் காங்கிரஸாா் ஈடுபட்டனா். இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் தலைமையில் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி இல்லம் அமைந்துள்ள பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், இளைஞா் காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ், தேசியச் செயலா் குஷ்பு சா்மா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இப்போராட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸாா் முழக்கங்களை எழுப்பினா். இது குறித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்துவிட்ட பிறகு பாஜக அரசு மீண்டும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தத் தொடங்கிவிட்டது. இந்த அரசுக்கு நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் குறித்த கவலை சிறிதும் இல்லாமல் மக்களை துன்புறுத்துகிறது. மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் மத்திய அரசு கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த விலை உயா்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே ஏராளமான பிரச்னையில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிடுவதற்குப் பதிலாக விலைவாசி எனும் உரலில் இட்டு அவா்களை அரைத்து வருகிறது. மக்கள் பிரச்னை குறித்த மனநிலையை பிரதமா் மோடி முற்றிலுமாக மாற்றிக்கொண்டிருப்பதையே இது காட்டுவதாக உள்ளது. இதனால், சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனா் என்றாா் அவா். இந்தப் போராட்டத்தை ஒட்டி அமைச்சா் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.