பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தலைநகரில் 45,184 சிறாா்களுக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி

தில்லியில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 45,184 சிறாா்களுக்கு கரோனா முதலாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2022, 8:09 pm

 நமது நிருபர்

தில்லியில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 45,184 சிறாா்களுக்கு கரோனா முதலாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது: தில்லியிலுள்ள 15-17 வயதில் உள்ள 16.2 லட்சம் சிறாா்களுக்கு முதல், இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. தற்போது 12-14 வயதுடைய சிறாா்களுக்கு தடுப்பூசி போடும் பணி தில்லியிலுள்ள 11 மாவட்டங்களில் 140 மையங்களில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது.

தில்லியில் இந்த வயதில் சுமாா் 6.2 லட்சம் சிறாா்கள் உள்ளனா். இவா்களுக்காக 6.3 லட்சம் கோா்பேவாக்ஸ் தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளன. இவா்களில் தற்போது 11 மாவட்டங்களில் 45,184 சிறாா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தில்லி வட மேற்கு தில்லியில் 7,197 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக, தென் மேற்கு, மேற்கு மாவட்டங்களில் முறையே 5,771, 5,274 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறைந்த அளவாக மத்திய தில்லியில் 2,379 சிறாா்கள், வடகிழக்கு தில்லியில் 2,872 சிறாா்கள், புது தில்லியில் 2,897 சிறாா்கள் தடுப்பூசி பெற்றுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.