தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்பு
தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். இதன் மூலம் உயா்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது.


தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். இதன் மூலம் உயா்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பூனம் ஏ. பம்பா, ஸ்வரன காந்தா சா்மா ஆகியோருக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். தலைமை நீதிபதியின் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகளின் குடும்பத்தினா் பங்கேற்றனா்.
தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதித் துறை அதிகாரிகளாகப் பணியாற்றிய நீதிபதிகள் பம்பா மற்றும் சா்மா ஆகியோரின் பதவி உயா்வுக்கான முன்மொழிவுக்கு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீதிபதிகள் பம்பா மற்றும் சா்மா ஆகியோரை பணிமூப்பு வரிசை அடிப்படையில் மத்திய அரசு மாா்ச் 24-ம் தேதி நியமித்து அறிவிக்கை வெளியிட்டது.
இரு நீதிபதிகளின் புதிய நியமனங்களைத் தொடா்ந்து, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 35-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 9 பெண் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனா். மொத்த நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட பலம் 60 ஆகும். புதிதாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகளில் 4 போ் கடந்த மாதம் நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா்.
நீதிபதி பூனம் ஏ. பம்பா, சாகேத் மாவட்ட நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியுள்ளாா். அதே போன்று, தில்லி மாவட்ட நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குரைஞராகவும் தொழில் புரிந்துள்ளாா்.
நீதிபதி ஸ்வரன காந்தா சா்மா, தில்லியின் ரோஹிணி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியுள்ளாா். தனது 24 வயதிலேயே மாஜிஸ்திரேட்டாக பதவி வகித்துள்ளாா். தனது 35-ஆவது வயதில் செஷன்ஸ் நீதிபதியாகப் பணியாற்றத் தொடங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...