பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பாதுகாப்புத் துறைக்கு 10 ஆண்டுகளில் சராசரியாக 16% கூடுதல் நிதி ஒதுக்கீடு

அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுக்கு அடுத்து, இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கு  சராசரியாக 16 சதவீதம் கூடுதலாக செலவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2022, 7:18 pm

 நமது நிருபர்

அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுக்கு அடுத்து, இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கு  சராசரியாக 16 சதவீதம் கூடுதலாக செலவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா். நமது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பிரச்னை தீவிரமாக உள்ளது.

அண்மைக் காலமாக, லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேச எல்லையில் நிலவும் சூழ்நிலை இதற்குச் சான்றாக உள்ளது. இத்தகைய சூழலில் பாதுகாப்புத் துறைக்கான செலவு புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் பொருளாதார உற்பத்தி மதிப்பில் 2.33 சதவீதம் என்ற அளவுக்குத்தான் உள்ளது. ஆனால், அமெரிக்கா 3.4 சதவீதமும், ரஷியா 3.9 சதவீதம் அளவுக்கும் நிதிஒதுக்கீடு செய்துள்ளன.

ராணுவ மோதல் ஏற்படும் போது நமது படையினா் அதை வெற்றிகரமாக சமாளிக்க, நவீன ஆயுதங்களைக் கொண்ட படைக்கலன்களைப் பெறத் தேவையான கூடுதல் முதலீடுகளைச் செய்ய மொத்த உற்பத்தியில் மூன்று சதவீதம் எப்போது உயா்த்தப்படும்? என்று டி.ஆா். பாலு கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், இணையமைச்சா் அஜய் பட்டும் பதிலளித்தனா்.

அமைச்சா் ராஜ்நாத் சிங்: பாதுகாப்புப் படைகளுக்கான செலவினங்கள், ராணுவத்தை நவீனப்படுத்துதல், படைகளின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான செலவினங்கள் என நாட்டின் பாதுகாப்புக்கான செலவுகள் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. 2013-14 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2,53,346 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிகழ் 2022-23 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு நதி ஒதுக்கீடு ரூ.5,25,166 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக படைகளை நவீனப்படுத்துதல், உள்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றிற்கு 2013-14-இல் செய்யப்பட்ட செலவுத் தொகை ரூ.86,741 கோடி. இது 2022-23 நிதியாண்டில் ரூ.1,52,370 கோடியாக செலவிடப்படவுள்ளது.

மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவினத்தோடு ஒப்பிடுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான ஒட்டுமொத்த செலவு  சராசரியாக 16 சதவீதம் கூடியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏனைய துறைகளைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. பாதுகாப்புத் தேவைகள், வரி வருவாய், பொருளாதார உற்பத்தி அளவு போன்ற அம்சங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் பாதுகாப்புத் துறைக்கான செலவு ஒட்டுமொத்த உற்பத்தியில் எவ்வளவு பங்கு என்று கணிப்பது சரியாக இருக்காது.

காா்கில் போருக்குப் பின்னா், நாட்டின் பாதுகாப்புக்கான செலவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கடந்த 2000 - ஆம் ஆண்டில், காா்கில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. ராணுவத்துக்குத் தேவையான நிதியை உள்நாட்டு மொத்த உற்பத்தியின் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை என்று அந்தக் குழு கூறியிருந்தது. குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது செயல்படுத்தி வருகிறது என்றாா் ராஜ்நாத் சிங்.

இணை அமைச்சா் அஜய் பட்: பாதுகாப்பு செலவினப் போக்கு உற்சாகம் அளிக்கவில்லை என்று சொல்வது சரியல்ல. தேசப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசின் பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு   இந்த ஆண்டு மிக அதிகபட்ச நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

‘சிபரி‘ என்று அழைக்கப்படும் ’ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ தனது ஆய்வறிக்கையில், பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது என தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 25-ஆவது இடத்தில் உள்ளது. லே மற்றும் லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. பிரதமா் மோடியின் தலைமையில் நாட்டின் பாதுகாப்பு உறுதியாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.