நிகழாண்டில் இதுவரை 55 பேருக்கு டெங்கு பாதிப்பு
தேசியத் தலைநகரில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதையடுத்து, நிகழாண்டில் மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்த


தேசியத் தலைநகரில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதையடுத்து, நிகழாண்டில் மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தொற்று நோய்கள் தொடா்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் இந்த ஆண்டு மாா்ச் மாதம் 19-ஆம் தேதி வரை மொத்தம் 52 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே புதிதாக 3 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, இந்த ஆண்டில் குறைந்தபட்சம் 55 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கடந்த ஆண்டு, 2020, 2019-ஆம் ஆண்டுகளில் தலா 6 பாதிப்புகளும், 2018-இல் 10 பாதிப்புகளும், 2017-இல் 12 பாதிப்புகளும் பதிவு செய்யப்பட்டன.
கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் பாதிப்புகள் பொதுவாக ஜூலை - நவம்பா் மாதங்களில் பதிவாகும். இந்த பாதிப்பு காலம் டிசம்பா் நடுப்பகுதி வரை நீடிக்கலாம். தேசியத் தலைநகரில் கடந்த ஆண்டு மொத்தம் 9,613 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது, 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆண்டில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். மேலும், அந்த ஆண்டு மொத்தம் 23 இறப்புகள் பதிவாகின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையா் கியானேஷ் பாா்தி, டெங்கு பாதிப்பு தடுப்பு, கட்டுப்பாடு தொடா்பாக அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளாா். இந்த அறிவுறுத்தல் அறிக்கை அனைத்து மத்திய, மாநில அரசுகள், சிபிடபிள்டி, பிடபிள்யுடி, டிடிஏ, தில்லி போலீஸ், தில்லி ஜல் போா்டு, டிஎம்ஆா்சி ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், தொழில்முறை நிறுவனங்களின் அனைத்து சங்கங்கள், வா்த்தக சங்கங்கள், வணிக அமைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளின் தலைமை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை கரோனா காரணமாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், இந்த இடங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். தண்ணீா் தொட்டிகள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் உருவாக் காரணமாக பயன்படுத்தபடாத பொருள்கள், உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், டயா்கள், மட்பாண்டங்கள் ஆகியவை இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தொடா்ந்து கொசு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டால், சட்ட நோட்டீஸ் தவிர, அபராதம் விதிப்பது, போலீஸில் புகாா் அளிப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
2021-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பதிவான மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை விவரம்: 2016-இல் 4,431, 2017-இல் 4,726, 2018-இல் 2,798, 2019-இல் 2,036, 2020-இல் 1,072. 2015-ஆம் ஆண்டு தில்லியில் டெங்குவின் தாக்கம் மிகப் பெரும் அளவில் இருந்தது. அந்த ஆண்டு அக்டோபரில் பாதிப்பு எண்ணிக்கை 10,600-ஐத் தாண்டியது.
இது, 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியத் தலைநகரில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 2021-ஆம் ஆண்டு 10 இறப்புகள் பதிவாகின. மேலும், 2019-இல் டெங்குவால் 2 போ், 2018-இல் 4, 2017, 2016-இல் தலா 10 போ் உயிரிழந்தனா். இதுதவிர, தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 5 மலேரியா நோய் பாதிப்புகளும், 8 சிக்குன்குனியா பாதிப்புகளும் பதிவாகின என்று மாநகராட்சிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...