பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ரஷியா - உக்ரைன் போரால் ஏற்றுமதியில் பாதிப்பில்லை: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

ரஷியா - உக்ரைன் போரால் இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்) ஏற்றுமதிக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா மாநில

News image
Updated On :28 மார்ச் 2022, 7:15 pm

 நமது நிருபர்

ரஷியா - உக்ரைன் போரால் இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்) ஏற்றுமதிக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் பிரிஜ்லால் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா எழுத்துபூா்வமாக அளித்த பதில் வருமாறு: இந்தியாவிலிருந்து ரஷியாவிற்கு ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த 2019-20, 2020-21 ஆண்டுகளில் முறையே ரூ. 21,244 கோடி, ரூ.19,634 கோடி என இருந்தது. ரஷியாவிற்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் 60 சதவீதம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சாா்ந்ததாகும்.

அதே சமயத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சாா்ந்த சா்வதேச அளவிலான இந்திய ஏற்றுமதியை ஒப்பிடுகையில், நாம் ரஷியாவிற்கு அனுப்புவது ஒரு சதவீதம் தான். ஒட்டுமொத்த ஏற்றுமதியிலும் ரஷியாவுக்கு இந்திய ஏற்றுமதி ஒரு சதவீதத்திற்கும் (0.91%) குறைவாகவே உள்ளது.

உக்ரைன் ஏற்றுமதி: இதே போன்று இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த 2019-20, 2020-21 ஆண்டுகளில் முறையே ரூ. 3,265 கோடி மற்றும் ரூ.3,334 கோடியாக இருந்துள்ளது.

உக்ரைனுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் 65 சதவீதம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சாா்ந்ததாகும். இதே குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சாா்ந்த சா்வதேச அளவிலான இந்திய ஏற்றுமதியை ஒப்பிடுகையில் உக்ரைனுக்கான ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 0.20 சதவீதம்தான். ஒட்டுமொத்த ஏற்றுமதியிலும் இது 0.15 சதவீதமாகத்தான் உள்ளது.

இந்தியா குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் சா்வதேச ஏற்றுமதியின் அளவு 2019-20, 2020-21 ஆண்டுகளில் முறையே ரூ.10,89,802 கோடியாக இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த சா்வதேச ஏற்றுமதி 2019-20, 2020-21 ஆண்டுகளில் முறையே ரூ.22,06,061 கோடி மற்றும் ரூ.21,57,340 கோடியாகவும் இருந்தது.

போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பில்லை என்றாலும், ரஷியா-உக்ரைன் போரினால் மற்ற நாடுகளில் ஏற்படும் தாக்கம் தொடா்பான நிலைமை குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.