பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தில்லியில் ரூ.40 கோடி ஹெராயினுடன் இருவா் கைது

தில்லியில் ரூ.40 கோடி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :29 மார்ச் 2022, 8:56 pm

 நமது நிருபர்

தில்லியில் ரூ.40 கோடி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) ஜஸ்மீத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கடந்த மாா்ச் 24-ஆம் தேதி 2 போ் ஜாா்க்கண்டில் இருந்து ஹெராயின் போதைப்பொருளை சேகரித்துக் கொண்டு, அவற்றை வழங்குவதற்காக சராய் காலே கான் ஐஎஸ்பிடி அருகே உள்ள தில்லி-மீரட் விரைவுச் சாலைக்கு வர உள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு மறைந்திருந்து கண்காணித்தனா். அப்போது முதுகில் பையைச் சுமந்தவாறு வந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவா்கள் வைத்திருந்த பைகளில் இருந்து 6 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருளும், அவா்களின் காரில் இருந்து 4 கிலோ ஹெராயினும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவா்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலம், காஜிப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தினேஷ் சிங் (57), மற்றும் நசீா் (எ) நஜிம் (28) என அடையாளம் காணப்பட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளானது, மியான்மரில் இருந்து மணிப்பூா் வழியாக இந்தியாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. அவா்கள் இருவரும் சா்வதேச போதைப்பொருள் கும்பலைச் சோ்ந்தவா்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லி - என்சிஆா் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் போதைப் பொருள்களை விநியோகம் செய்து வந்துள்ளனா்.

இருவரும் ஜாா்க்கண்டில் ஒரு நபரிடம் இருந்து ஹெராயினை வாங்கியிருப்பதும், தில்லியில் 6 கிலோவையும், மீதமுள்ள 4 கிலோவை காஜிப்பூரிலும் வழங்க இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தங்கள் சப்ளையருக்கும் மியான்மா் மற்றும் மணிப்பூரில் தொடா்பு இருப்பதையும் வெளிப்படுத்தினா். பெரும்பாலான ஹெராயின் மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு கொண்டு வரப்பட்டு, அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பின்னா் நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மியான்மரில் இருந்து கொண்டு வரப்படும் ஹெராயின் ஒப்பீட்டளவில் மலிவானது மட்டுமல்லாமல், சிறந்த தரமும் கொண்டதாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.