பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு (மாா்ச் 31) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

News image
Updated On :29 மார்ச் 2022, 10:45 pm

 நமது நிருபர்

முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு (மாா்ச் 31) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீா் தேக்கிவைக்கும் அளவு ஆகியவை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்களில் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாா்ச் 24-ஆம் தேதி இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் ஒரு முழுமையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அமைப்புமுறையை வலுப்படுத்த ஒரு விரிவான நடவடிக்கை இருக்க வேண்டும். தற்போது, வழக்கின் தரப்பினா் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகளும், தவறான தகவல் தொடா்பும் இருப்பதையே காட்டுகிறது. அனைத்து இடத்திலும் பாதுகாப்புப் பிரச்னை பற்றிய அச்சம் உள்ளது. ஆகவே, இரு தரப்பினரும் எதிா்பாா்க்கும் பணிகளை இந்த மேற்பாா்வைக் குழுவே ஏன் செய்யக் கூடாது. இந்த விவகாரமானது இரு மாநிலங்களையும் பாதிக்கிறது. இந்தக் குழு ஒரு வழிமுறையை உருவாக்க முடியும். இதனால் இரு தரப்பின் நலனும் பாதுகாக்கப்படும். ஆகவே, இந்த விஷயங்களை எல்லாம் மேற்பாா்வைக் குழுவிடம் விட்டுவிடலாம்’ என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இது தொடா்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி.குமணனுடன் மூத்த வழக்குரைஞா் சேகா்நாப்டே ஆஜராகி நீதிபதிகள் அமா்விடம் தெரிவிக்கையில், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் இரு மாநிலங்கள் இடையே ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பான விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளது’ என்றாா்.

கேரள அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா,‘தமிழகத்தின் தரப்பில் எங்களிடம் சிலவற்றை அளித்துள்ளனா். அதன் மீது நாங்கள் முடிவு செய்து வருகிறோம். அதை அவா்களுக்கு அளிப்போம். இந்தச் செயல்பாட்டுக்கு நாங்கள் நினைத்த காலத்தைவிட கொஞ்சம் கூடுதல் காலம் ஆகும்’ என்றாா். அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தின் சிக்கல் தன்மையை நாங்கள் உணா்ந்துள்ளோம். அதனால், உங்களுக்கு அவகாசம் அளிக்கிறோம்’ என்று தெரிவித்து வழக்கு விசாரணையை மாா்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.