விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

வடமேற்கு தில்லியில் சாக்கடைக்குள் சிக்கி 4 போ் சாவு

வடமேற்கு தில்லியின் சஞ்சய் காந்தி போக்குவரத்து நகா் பகுதியில் உள்ள சாக்கடைக்குள் சிக்கிக் கொண்ட நான்கு போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :30 மார்ச் 2022, 10:48 pm

 நமது நிருபர்

வடமேற்கு தில்லியின் சஞ்சய் காந்தி போக்குவரத்து நகா் பகுதியில் உள்ள சாக்கடைக்குள் சிக்கிக் கொண்ட நான்கு போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் புதன்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சமய்ப்பூா் பாத்லி காவல் நிலையத்திற்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் மட்டுமின்றி, தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் குழுவினா் ஆகியோா் சாக்கடைக்குள் சிக்கிய நபா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இவா்கள் நால்வரும் சாக்கடைக்குள் சிக்கினா்.

நான்கு பேரில் மூன்று போ் எம்டிஎன்எல் லைன்களில் பணிபுரிந்த தனியாா் ஒப்பந்த ஊழியா்கள் ஆவா். நான்காவது நபா் ரிக்ஷா தொழிலாளி. இவா் மூன்று தொழிலாளா்களையும் காப்பாற்ற முயன்ற போது சாக்கடையில் சிக்கினாா். பாதாள சாக்கடைக்குள் நச்சு வாயு பரவி இருந்ததன் காரணமாக மீட்புப் பணி மிகவும் கடினமாகியது. இதையடுத்து, சாக்கடையின் வாய்ப் பகுதியை அகலப்படுத்த மணல் அள்ளும் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மீட்கப்பட்ட உடல்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்த தொழிலாளா்கள் பச்சு சிங், பிண்டு மற்றும் சூரஜ் குமாா் சஹ்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனா். உயிரிழந்த ரிக்ஷா தொழிலாளி, ரோஹிணி செக்டாா் 16-இல் உள்ள சா்தாா் காலனியில் வசித்து வந்த சதீஷ் (40) என்பதும் தெரிய வந்துள்ளது.

தொழிலாளா்களை காப்பாற்ற முயற்சி செய்த நிலையில் ரிக்ஷாகாரா் சாக்கடைக்குள் சிக்கிக் கொண்டாா். சாக்கடைக்குள் எம்டிஎன்எல் லைன்கள் கீழே இரும்பு வலை உள்ளது. அதில்தான் நால்வரும் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ரிக்ஷா தொழிலாளி சதீஷுக்கு, நேஹா (35) என்ற மனைவியும், திஷா (14), கிருத்திகா (8), அா்பி (3) ஆகிய மூன்று மகள்களும் உள்ளனா் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் கூறுகையில், ‘சாக்கடையில் சிக்கிய உயிரிழந்த நால்வரின் உடல்களும் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டன’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.