தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தலைநகரில் வெயிலின் தாக்கம் 2 டிகிரி அதிகரிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின்தாக்கம் சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது.

News image
Updated On :8 மே 2022, 6:41 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின்தாக்கம் சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் லேசான மழை பெய்ததாலும், காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததாலும் சனிக்கிழமை

வெப்பம் சற்று தணிந்திருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நகரில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முதல் வட இந்தியாவில் வெயின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றம் ஏதுமின்றி 25.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 40.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 55 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவும் இருந்தது.

ஜாஃபா்பூரில் 42.3 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 40.8 டிகிரி, நஜஃப்கரில் 42.7 டிகிரி, லோதி ரோடில் 39.8 டிகிரி, பாலத்தில் 41.5 டிகிரி, ரிட்ஜில் 40.3 டிகிரி, பீதம்புராவில் 40.2 டிகிரி செல்சியஸ், சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 38.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

முன்னறிவிப்பு: இந்த நிலையில், திங்கள்கிழமை (மே 9) வானம் தெளிவாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.