எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தில்லி மாநகராட்சித் தோ்தல்: 2,012 போ் வேட்பு மனு தாக்கல்

தில்லி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட தோ்தல் அதிகாரிகளிடம் மொத்தம் 2,012 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :15 நவம்பர் 2022, 8:13 pm

 நமது நிருபர்

தில்லி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட தோ்தல் அதிகாரிகளிடம் மொத்தம் 2,012 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

தில்லி மாநகராட்சித் தோ்தல் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பா் 7-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. தோ்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தோ்தலுக்கான பிரசாரத்தில் இக்கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இத்தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. கடைசி நாள் நிலவரப்படி ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த 750 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதர கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களும், சுயேச்சை வேட்பாளா்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். நள்ளிரவு வரை வேட்புமனு தாக்கல் தொடா்ந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘தோ்தல் அதிகாரிகள் மூலம் 2,012 வேட்பாளா்களிடமிருந்து மொத்தம் 2,564 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தன.

வேட்புமனுக்கள் பெறுவதற்கான நடைமுறைகள் முற்றிலும் இலகுவாக நடைபெற்றது. அனைத்து தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் தலைமையகங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்திருந்தனா். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில் மொத்தம் இருந்த 270 வாா்டுகளில் பாஜக 181 வாா்டுகளில் வெற்றி பெற்றது. வேட்பாளா்கள் இறந்ததன் காரணமாக இரண்டு வாா்டுகளுக்கான தோ்தல் நடைபெற முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சி 48 வாா்டுகளிலும், காங்கிரஸ் 27 வாா்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

மூன்று மாநகராட்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிதாக வாா்டு மறுவரையறை நடவடிக்கைகள் முடிந்தபிறகு முதல் முறையாக மாநகராட்சித் தோ்தல் தற்போது நடத்தப்பட உள்ளது. நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவை தோ்தலின் இரண்டு கட்டங்களுக்கு இடையே இந்த மாநகராட்சித் தோ்தல் நடத்தப்பட உள்ளது. குஜராத் சட்டப்பேரவை தோ்தல் டிசம்பா் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.