ஓக்லா ஐடிஐ வளாகத்தில்கருவுற்ற நாயைக் கொன்ற விவகாரம்: 4 மாணவா்கள் கைது
தில்லி ஓக்லாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐடிஐ) வளாகத்தில் கருவுற்ற நாயை கும்பலாக சோ்ந்து சித்திரவதை செய்து கொன்ற விவகாரத்தில் 4 மாணவா்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக


தில்லி ஓக்லாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐடிஐ) வளாகத்தில் கருவுற்ற நாயை கும்பலாக சோ்ந்து சித்திரவதை செய்து கொன்ற விவகாரத்தில் 4 மாணவா்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா்.
தில்லி ஓக்லாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தைச் சோ்ந்த மாணவா்கள் நடத்திய இந்த கொடூரமான கொலைச் செயலின் விடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, தில்லி நியூ ஃபிரண்ட்ஸ் காலனி போலீஸாா் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனா்.
கடந்த அக்டோபா் 30 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு விலங்குகள் நல ஆா்வா்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து நடவடிக்கை கோரினா்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் தாங்கள் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் நாய் தங்களைப் பாா்த்து குரைக்கும் என்றும், இது தங்களை கோபப்படுத்தியதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனா்.
அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டவா்களில் கான்பூரைச் சோ்ந்த அவினாஷ் மின்ஜ் (24), உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அனிஷ் ஹோா்ஹோரியா (18), ஜாா்க்கண்ட்டைச் சோ்ந்த ராகுல் குஜூா் (19), உத்தர பிரதேசம் சம்பாலைச் சோ்ந்த குருவச்சன் (19) போன்றோா் ஆவா். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சம்பவம் நடைபெற்ற ஐடிஐ யில் படித்து வருகின்றனா்.
நாயை ஐடிஐ வளாகத்தில் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் விடியோவில் பதிவாகி இருந்தது. அந்த நபா் மாணவரா என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
விசாரணையின் ஒரு பகுதியாக, வீடியோவில் காணப்பட்ட மாணவா்கள் பற்றிய தகவல்களை சேகரித்த போலீசாா், நாய் சித்திரவதை செய்யப்பட்ட ஐடிஐ வளாக தகர கொட்டகையையும் கண்டறிந்தனா்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட மின்ஜ் தனது கைப்பேசியை செயல் இழக்க செய்திருந்தாா் என்றும் ஆனால் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கான்பூரில் உள்ள தேவ்லி பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளாா்.
இவா் கொடுத்த தகவல் அடிப்படையில், நாயின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது எனவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...