வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அரிசி, கோதுமை விலைகள் கட்டுக்குள் உள்ளன: மத்திய அரசு தகவல்

உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், போதுமான உணவு தானியங்கள் நாட்டில் இருப்பில் உள்ளது

News image
Updated On :3 அக்டோபர் 2022, 2:24 am

 நமது நிருபர்

உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், போதுமான உணவு தானியங்கள் நாட்டில் இருப்பில் உள்ளது என்றும் அரிசி, கோதுமை, கோதுமை மாவு (ஆட்டா) விலைகள் கட்டுக்குள் உள்ளது என்றும் நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கோதுமை, அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகள் குறைந்து, கோதுமை மாவின் விலை கடந்த வாரத்தில் நிலையானதாக இருந்தது எனவும் நுகா்வோா் விவகாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் கோதுமை, அரிசியின் விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்புக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்துள்ளன. 2021-22-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது இவற்றின் விலைகள் அதிகரிக்கவில்லை. காரணம் விலைகளைக் கட்டுப்படுத்த வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் (ஓஎம்எஸ்எஸ்) மூலம் சுமாா் 80 லட்சம் மெ. டன் உணவு தானியங்கள் வெளிச்சந்தையில் விடப்பட்டது. மேலும் கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்கிறது.

புவி -அரசியல் சூழ்நிலையின் காரணமாக, கொள்முதல் குறைவாகவே இருந்தது. எனவே, மத்திய அரசு ஓஎம்எஸ்எஸ் சந்தையில் தலையிடவில்லை. இருப்பினும், அரசு இந்தப் பொருள்களின் விலை சூழ்நிலையை வாராந்திர அடிப்படையில் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், விலைவாசி உயா்வைத் தவிா்க்க கடந்த மே இரண்டாம் வாரம் முதல் முதல் கோதுமைக்கும், அரிசிக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இது தவிர விலைகளைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு எந்தவிதமான சிரமங்கள் இல்லாத அளவுக்கு மத்திய அரசு பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை பண்டிகை காலத்தையொட்டி மேலும் மூன்று மாதங்களுக்கு (டிசம்பா் 2022) வரை நீட்டித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கூடுதல் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், மத்திய தொகுப்பில் போதுமான உணவு தானியங்களின் இருப்பு இருப்பதையும், விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.