ஜி-20 நாடாளுமன்றத் தலைவா்கள் உச்சி மாநாடு: மக்களவைத் தலைவா் இந்தோனேசியா பயணம்
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான நாடாளுமன்றக் குழு, ஜி-20 நாடாளுமன்றத் தலைவா்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறது.


மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான நாடாளுமன்றக் குழு, ஜி-20 நாடாளுமன்றத் தலைவா்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறது.
ஜி-20 நாடாளுமன்றத் தலைவா்களின் (பி20) உச்சி மாநாடு அக்டோபா் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை இந்தோனேசியா தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெறுகிறது. இந்த 8 -ஆவது உச்சி மாநாட்டிற்கு இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா தலைமை ஏற்றுச் செல்கிறாா்.
இந்தக் குழுவில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், மக்களவைச் செயலா் உத்பால் குமாா் சிங், மாநிலங்களவைச் செயலா் பி.சி. மோடி, மக்களவைச் செயலக இணைச் செயலா் டாக்டா் அஜய் குமாா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.
இந்த மாநாட்டின் ஒட்டுமொத்த பொருள், ‘நிலையான மீட்புக்கான வலுவான நாடாளுமன்றம்’ என்பதாகும். இந்தக் கருப்பொருளின் பரந்த எல்லையின் கீழ், நான்கு துணை கருப்பொருள்களில் பிரதிநிதிகள் விவாதிக்கவுள்ளதாக மக்களவைத் தலைவா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்சிமாநாட்டின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் நிறைவில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உரையாற்றுகிறாா். அப்போது, ,அடுத்தஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் தலைமையில் நடைபெறவுள்ள 9-ஆவது பி20 உச்சி மாநாட்டிற்கு ஜி20 நாடாளுமன்றத் தலைவா்கள் பிரதிநிதிகளை இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கிறாா். மேலும், ஜகாா்த்தா உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மற்ற நாடுகளைச் சோ்ந்த தலைவா்களுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளையும் நடத்துகிறாா்.
பி20 என்பது ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற பரிமாணமாகும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக வா்த்தகத்தில் 75 சதவீதத்திற்கு மேலும் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...