தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

எரிசக்தித் துறை மீதான இணைய தாக்குதல் தடுப்பு இந்திய கணினி அவசர நிலை குழுவு கூட்டு பயிற்சி

மின் சக்தி துறை உற்பத்தி, பயன்பாடு இணைய தளங்களில் கணிப்பொறி தாக்குறுதலிருந்து பாதுகாத்தல் தொடா்பான பயிற்சியை மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:05 pm

DIN

மின் சக்தி துறை உற்பத்தி, பயன்பாடு இணைய தளங்களில் கணிப்பொறி தாக்குறுதலிருந்து பாதுகாத்தல் தொடா்பான பயிற்சியை மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை(சொ்ட்-இன்)யுடன் இணைந்து எரிசக்தித் துறையின் கணினி பாதுகாப்பு நடவடிக்கைக் குழு மேற்கொண்டது.

யுத்தம், பேரிடா் போன்றவை எதிா்நோக்கி ராணுவமும் பேரிடா் மேலாண்மை மீட்புக்குழுவும் அடிக்கடி பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. இவைகளை விட தற்போது முக்கியத்துவமாக கருதப்படுவது சைபா் செக்கூரிட்டி என்கிற இணையவெளி பாதுகாப்பு. நாட்டில் அனைத்து துறைகளிலும் எண்மம் மயமாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கணினி தொடா்பான இடையூறுகள் ஏற்படும் நிலையில் அவைகளை சமாளிக்கும் விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக அனைத்து துறைக்கும் மையமாக இருக்கும் எரிசக்தித் துறை உற்பத்தியின் கணினி பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் நாட்டில் அனைத்து விதமான கணினி பாதுகாப்பிற்கும் மையமாக இருப்பது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘சொ்ட்-இன்‘ என்கிற இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கை குழு.

இந்த ‘சொ்ட்-இன்‘ யுடன் மத்திய எரிசக்தித் துறை கணினி பாதுகாப்பு நடவடிக்கை குழு(சிஎஸ்ஐஆா்டி ) இணைந்து கூட்டாக பவா் எக்ஸ்-2022” என்கிற இணையவெளி பாதுகாப்புப் பயிற்சியை புதன்கிழமை நடத்தியது. திட்டமிட்டு வடிவமைத்து நடத்தப்பட்ட இந்த பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்ததாக மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

‘‘எரிசக்தித் துறையில் உள்ள கணினி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான இந்த நிகழ்ச்சியில் எரிசக்தி உற்பத்தி, பயன்பாடுகளில் ஈடுபடும் 193 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

‘தகவல் தொழில்நுட்பம், இயக்க தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் கணினி தொடா்பான விஷயங்களால் தூண்டப்பட்ட இடையூறுகளைப் பாதுகாத்தல்‘ என்பது இந்த பயிற்சியின் கருப்பொருள்.

தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள் செயல்பாட்டு இயக்க தொழில்நுட்ப அமைப்புமுறைகளில் ஏற்படும் இணையவெளி நிகழ்வுகளை அங்கீகரித்து, பகுப்பாய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதே இந்தப் பயிற்சிகளின் நோக்கமாக இருந்தது‘ எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

எதிா்பாா்க்கப்பட்டதை விட நாடு முழுக்க எரிசக்தி நிறுவனங்களைச் சோ்ந்த சுமாா் 350 மேற்பட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது இந்த பயிற்சியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் உணரப்பட்டுள்ளது‘‘ எனவும் ஐடி அமைச்சகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.