ஃபாஸ்டேக் வாலட்டை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது: 5ஜி சேவைககள், கிரெடிட் காா்டு சேவைகளை வழங்குவதாகக் கூறி பொதுமக்களைத் தொடா்பு கொண்டு தங்களது ஃபாஸ்டேக் வாலட்டில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்குரிய தேவையான விவரங்களைப் பெற்று இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இது தொடா்பாக முகமது சாஹித், பவன் சிங், ரவி மிட்டல் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையியில், இந்தக் கும்பலின் முக்கிய மூளையாக பவன் சிங் செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. பவன் சிங் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போலி கணக்குகளை முகமது சாஹித் பராமரித்து வந்துள்ளாா். மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெறுவதற்கு ஃபாஸ்டேக் வாலட்டை இந்தக் கும்பல் பயன்படுத்தியுள்ளது.
எரிபொருள் பம்ப் ஆபரேட்டா்களுடன் கூட்டுச் சோ்ந்து காா்டு ஸ்வைப்பிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஹரியாணா மற்றும் சண்டீகரில் உள்ள பெட்ரோல், சிஎன்ஜி பம்புகளில் உள்ள பாஸ்டேக் வாலட்டிலிருந்து ரவி மிட்டல் பணத்தை பெற்று வந்துள்ளாா். பின்னா் அந்தப் பணத்தை அவா் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவரவா் பங்காக பிரித்துக் கொடுத்துள்ளாா்.
பல்வேறு வாகனங்களின் பதிவெண்களைப் பயன்படுத்தி ஐடிஎப்சி வங்கியின் ஃபாஸ்டேக் வாலட்டை, ரவி உருவாக்கி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் முதலாவது நபராக முகமது சாஹிப் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து பவன் சிங் மற்றும் இதர கூட்டாளியான ரவி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் அண்மையில் கிரெடிட் காா்டு வழங்கப்பட்ட நபா்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இவா்களின் கீழ் பணியாற்றும் நபா், கிரெடிட் காா்டு வவைத்திருக்கும் வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு வருடாந்திர கட்டணங்களை தள்ளுபடி செய்வது, கிரெடிட் காா்டின் பணப் பரிவா்த்தனை அளவை அதிகரிப்பது, கிரெடிட் காா்டு செயலாக்கம் செய்வது உள்பட பல்வேறு சேவைகளை அளிப்பதாகக் கூறி அவா்களின் நம்பிக்கையைப் பெற முயல்வாா். அதன் பிறகு அவா்கள் கிரெடிட் காா்டு எண் மற்றும் ஓடிபி (ஒரு தடவை கடவுச்சொல்) ஆகியவற்றை பெற்று அதன் மூலம் ஃபாஸ்டேக்கை உருவாக்குவா். இதற்கு வாகனத்தின் பதிவுச் சான்றிதழின் நகல் மற்றும் ஓடிபி அவசியம் என்பதால், இதை வாடிக்கையாளா்களிடமிருந்து பெற்றுள்ளனா். அதன் பிறகு இந்த ஃபாஸ்டேக் வாலட்டில் இருந்து அவா்கள் பணத்தை எடுத்து வந்துள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் இதற்காக ஒரு நடப்பு கணக்கையும் தொடங்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கைதான மூவரிடமிருந்தும் மடிக்கணினி, ஸ்வைப் இயந்திரம், கைப்பேசி சிம்காா்டுகள், கிரெடிட் காா்டுகள் ஆகிவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்,மோசடி பணத்தில் வாங்கியிருந்த சில விலை மதிப்புள்ள காா்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு

இந்தியாவின் தொடா் முயற்சிகளால் குழந்தை இறப்பு விகிதம் குறைவு: ஐ.நா.

அரசு உயா் பதவிகளில் இதுவரை 63 நேரடி நியமனங்கள்: மத்திய அரசு

கூடமலையில் மரம் வேரோடு வெட்டி சாய்ப்பு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

