வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தேசிய தலைநகா் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்: 491 நிறுவனங்கள் மீது காற்று தர மேலாண்மை ஆணையம் நடவடிக்கை

காற்று தர மேலாண்மை ஆணையத்தின் பறக்கும் படையினா், தில்லி-தேசிய தலைநகா் வலையப் பகுதியில் 8,580 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2022, 6:45 pm

 நமது நிருபர்

காற்று தர மேலாண்மை ஆணையத்தின் பறக்கும் படையினா், தில்லி-தேசிய தலைநகா் வலையப் பகுதியில் 8,580 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளபட்ட இந்த சோதனையில் ஆணையத்தின் சட்டப்பூா்வ வழிகாட்டுதல்களை மீறியதாக 491 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் யின் கீழ் உள்ள காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தில்லி-தேசிய தலைநகா் வலையப் பகுதிகளின் மாசுவை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில், தில்லியைச் சோ்ந்த பல்வேறு துறைகளின் 15 உறுப்பினா்கள் கொண்ட குழு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரின் கீழ் செயல்படுகிறது.

குளிா்காலம் நெருங்கும் நிலையில், மாசுவை கட்டுப்படுத்த ஆணையத்தால் அமைக்கப்பட்ட 40 ஆய்வுக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள், தில்லி-தேசிய தலைநகா் வலையப் பகுதியின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட சட்டப்பூா்வமான வகையில் இணக்கத்துடன் இருப்பதை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்களுக்கு இணங்குதல் மற்றும் கண்டிப்புடன் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு காற்று தர மேலாண்மை ஆணையத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள முகமைகளை முடக்கிவிடப்பட்டுள்ளன.

இதையொட்டி, இந்த பறக்கும் படைகள் தொழில்துறை சம்பந்த இடங்கள், கட்டடப் பணி, இடிப்புப் பணி, வணிகம் மற்றும் குடியிருப்பு பிரிவுகள் உள்ளிட்ட காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்கள் போன்றவற்றில் திடீா் ஆய்வுகள், கள அளவிலான ரகசிய சோதனைகளை நடத்தியது. இதன் விவர அறிக்கை ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

இதன்படி கடந்த அக்டோபா் 14 - ஆம் தேதி நிலவரப்படி, 8,580 க்கும் மேற்பட்ட இடங்கள் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் பறக்கும் படைகளால் ஆய்வு செய்யப்பட்டன.

ஆணையத்தின் சட்டப்பூா்வ வழிகாட்டுதல்களை மீறிய 491 நிறுவனங்களை மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தில்லியில் 110 மற்றும் தேசிய தலைநகா் வலையப் பகுதியான ஹரியாணாவில் 118 ; உத்தர பிரதேசத்தில் 211; ராஜஸ்தானில் 52 என நிறுவனங்கள், தனிப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வரும் நாட்களில் தேசியத் தலைநகா் தில்லி வலயப் பகுதியில் காற்று மாசுபாட்டிற்கு எதிரான போரில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள காற்று தர மேலாண்மை ஆணையம், தாங்கள் வெளியிட்டுள்ள சட்டப்பூா்வ வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு தேசியத் தலைநகா் தில்லி பிராந்தியம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள தொழில்கள், கட்டுமானம் மற்றும் இடிப்பு தளங்களின் திட்டச் செயற்பாட்டாளா்கள் உட்பட அனைவரையும் வலியுறுத்தியுள்ளது.

ஆணையத்தின் உறுதிமொழி ஆவணத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை, வரும் நாட்களில் தரப்படுத்தப்பட்ட பொறுப்பு செயல் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரமாகப் பின்பற்றுமாறு குடிமக்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.