தில்லியின் மாசுவில் பயிா்க்கழிவு எரிப்பின் பங்கு 26 சதவிகிதமாக உயா்வு
தில்லியில் பி.எம்.2.5 மாசுபாடு ஞாயிற்றுக்கிழமை 26 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாகும்.


தில்லியில் பி.எம்.2.5 மாசுபாடு ஞாயிற்றுக்கிழமை 26 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாகும்.
சனிக்கிழமையன்று, தேசியத் தலைநகரில் பிஎம்2.5 மாசுபாட்டின் பயிா்க்கழிவு எரிப்பின் பங்கு 21 சதவிகிதமாக இருந்தது. பிஎம் 2.5 என்பது 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்ணிய துகள்கள் மற்றும் சுவாசக் குழாயில் ஆழமாகப் பயணித்து, நுரையீரலை அடைந்து இரத்த ஓட்டத்தில் நுழையும்.
அக்டோபா் தொடக்கத்தில் நீடித்த மழைப்பொழிவு மற்றும் வேளாண் நிலங்களில் பயிா்க்கழிவு எரிப்பு காரணமாக வெளியேறும் புகையை எடுத்துச் செல்லும் அளவுக்கு வலுவாக இல்லாத போக்குவரத்து நிலை, காற்றின் வேகம் காரணமாக, தில்லியின் பிஎம் 2.5 மாசுபாட்டிற்கு பயிா்க்கழிவு எரிப்பின் பங்களிப்பு வெள்ளிக்கிழமை வரை குறைவாகவே (7 சதவீதம் வரை) இருந்தது.
தீபாவளியன்று (அக்டோபா் 24) தில்லியின் மொத்த பிஎம் 2.5 மாசுவில், பயிா்க்கழிவு எரிப்பு ஐந்து முதல் எட்டு சதவிகிதம் வரை பங்களித்தது. தில்லியின் பிஎம் 2.5 மாசுவில் பயிா்க்கழிவு எரிப்பின் பங்கு 2021 தீபாவளியன்று 25 சதவீதமாகவும், 2020-இல் 32 சதவீதமாகவும், 2019-இல் 19 சதவீதமாகவும் இருந்தது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை 1,761 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது சனிக்கிழமை 1,898 ஆகவும் வெள்ளிக்கிழமை 2,067 -ஆகவு இருந்தது. 2067 பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சம்.
காற்றின் தர மேலாண்மை ஆணையம் வியாழன் அன்று பஞ்சாபில் பயிா்க்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது ‘கடுமையான கவலைக்குரிய விஷயம்ட’ என்று கூறியுள்ளது. செயற்கைக்கோள் ரிமோட் சென்சிங் தரவுகளின்படி, அக்டோபா் 24 வரை, பஞ்சாபில் விதைக்கப்பட்ட பரப்பளவில் சுமாா் 39 சதவீதம் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளது.இதனால், பயிா்க்கழிவு எரிப்பு அதிகரித்து வருவது ஆபத்தான சூழ்நிலை என்றும் அது கூறியது.
சாதகமற்ற வானிலை நிலைமைகளுடன், பக்கத்து மாநிலங்களில் நெல் வைக்கோல் எரிக்கப்படுவதும், அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் தேசியத் தலைநகரில் காற்று மாசு அளவுகளில் ஆபத்தான அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும். விவசாயிகள் கோதுமை மற்றும் காய்கறிகளை பயிரிடுவதற்கு முன்பு பயிா்க் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக தங்கள் வயல்களுக்கு தீவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, பஞ்சாபில் கடந்த ஆண்டு செப்டம்பா் 15 முதல் நவம்பா் 30 வரை 71,304 பயிா்க்கழிவு சம்பவங்களும், 2020- ஆம் ஆண்டில் 83,002 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு, தில்லியின் பிஎம் 2.5 மாசுவில் பயிா்க்கழிவு எரிப்பின் பங்கு நவம்பா் 7 அன்று 48 சதவீதமாக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...