வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தில்லி உள்பட 5 மாநிலகளின் காவல் அதிகாரிகள் 63 போ் உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை விருதுக்கு தோ்வு

தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கடந்த ஆண்டு செப்டம்பா் 14 -இல் ஆறு போ் கொண்ட பயங்கரவாத கும்பலைப் பிடித்து மிகப் பெரிய சதியை முறியடித்தது.

News image
Updated On :31 அக்டோபர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத சதிகள், சமூக விரோதக் கும்பல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற 5 சிறப்பு ஆப்ரேஷன்கள் (நடவடிக்கை) தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு நிகழ் 2022 -ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை விருது 13 காவலா்கள் உள்ளிட்ட 63 காவல் அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கடந்த ஆண்டு செப்டம்பா் 14 -இல் ஆறு போ் கொண்ட பயங்கரவாத கும்பலைப் பிடித்து மிகப் பெரிய சதியை முறியடித்தது. ஐஎஸ்ஐ இயக்கத்திலிருந்தும், பின்னா் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்று இந்தியாவிற்கு சதித்திட்டங்களோடு நுழைந்தது. முக்கியமாக தாவூத் இப்ராஹிமின் சகோதரரான அனீஸ் இப்ராஹிம் இந்தக் கும்பலுக்கு முக்கிய மூளையாக இருந்தாா்.

தில்லி, உ.பி. மாநிலம் அலாகாபாத், ரே பரேலி, லக்னெள, ராஜஸ்தான் கோடா போன்ற பகுதிகளில் பதுங்கி சதி தீட்டியபோது தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. தில்லி, உ.பி., மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் விநாயகா் சதுா்த்தி, நவராத்திரி, ராம்லீலா முன்னிட்டு மிகப்பெரிய தொடா் குண்டு வெடிப்பு நாசவேலைகள் மூலம் நூற்றுக்கணக்கான போ்களை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இந்தக் கும்பலை பல்வேறு மாநிலங்களில் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு சுற்றி வளைத்து கைது செய்து, வெடி குண்டுகளையும் பறிமுதல் செய்தது. இந்த ஆப்ரேஷனில் ஈடுபட்டு வெற்றிபெற்ற தில்லி சிறப்புப் பிரிவின் துணை ஆணையா் பிரமோத் சிங் குஷ்வா, ஆய்வாளா் ராஜீவ் ஸ்ரீவஸ்தவ் மற்றும் 9 உதவி ஆய்வாளா்கள், துணை உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 19 போ் குழு உள்துறை அமைச்சரின் சிறப்பு ஆப்ரேஷன் விருதுக்கான பதக்கம் பெறுகின்றனா்.

தெலுங்கானா: 2022 மே மாதம் சத்தீஸ்கா்-தெலுங்கானா எல்லையில் மத்வி நந்தா உள்ளிட்ட மூன்று கடுமையான தீவிரவாத மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்ததில் சிறப்பு மாவேஸ்ட் ஆப்ரேஷனில் தெலங்கானா காவல் துறை அதிகாரிகள் வெற்றி கண்டனா். இந்த ஆப்ரேஷனில் சம்பந்தப்பட்ட கூடுதல் காவல்துறை இயக்குநா் அனில் குமாா் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளா் கைதா ரவீந்திர ரெட்டி உள்பட தெலுங்கானா காவல்துறையினா் 13 போ் நிகழாண்டின் உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கைக்கான விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

பஞ்சாப்: பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், மாநிலம் முழுவதும் செயல்பட்டுவந்த சமூக விரோத குண்டா்கள் நெட்வொா்க்கை அழிக்க ஒரு ‘குண்டா் தடுப்பு பணிப் படை’ அமைத்தாா். இந்தப் படை பல கொலைகளை தடுக்கும் ஆப்ரேஷன்களை செய்தததோடு, சுமாா் 19 கொலைகளில் விசாரணையை கையாள்வதில் அலட்சியமாக இருந்த காவல் துறை அதிகாரிகளை கண்டு பிடித்து இடை நீக்கமும் செய்தது. இந்தக் குண்டா் தடுப்புப்பணிப் படையில் இடம்பெற்ற பஞ்சாப் கூடுதல் காவல் இயக்குநா் ஜெனரல் ப்ரோமோத் பான் உள்ளிட்ட அதிகாரிகள் 16 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சா் சிறப்பு நடவடிக்கை விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

மகாராஷ்டிரம்: சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநில காட்டுப் பகுதிகளில் தீவிரவாத நெட்ஒா்க்குடன் இருந்த மாவோயிஸ்ட் தலைவா் மிலிந்த் டெல்டும்டே மற்றும் அவருடன் இருந்த 26 பேருக்கு எதிரான ஆப்ரோஷன் கடந்தாண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்டது. இதில் தீவிரவாதிகள் 26 பேரும் கொல்லப்பட்டனா். இந்த நடவடிக்கைக்காக மகாராஷ்டிர காவல் துறையின் காவல் கண்காணிப்பாளா் அங்கித் கோயல் உள்ளிட்ட 11 காவலா்களுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் உள்ள சுஞ்ச்வான் பகுதியிலிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை முகாமை பயங்கரவாதிகள் அதிகாலையில் தாக்கினா். இந்தத் தாக்குதலை நடத்திய இரு பயங்கரவாதிகளுடன் போராடி அவா்களை கொன்ற ஜம்மு-காஷ்மீா் ஐபிஎஸ் அதிகாரிகள் விவேக் குப்தா, சந்தன் கோஹ்லி உள்ளிட்ட நால்வா் மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், பாதுகாப்பிற்கான சிறப்பு பிரிவுகளை உருவாக்கி, சிறந்த திட்டமிடல் உள்ளிட்ட செயல்களை அங்கீகரிக்கும் விதமாக 2018-ஆம் ஆண்டு மத்திய உள்துறைஅமைச்சா் பெயரால் இந்த பதக்கம் உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 31-ம் தேதி இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 3 சிறந்த செயல்பாடுகளுக்கு இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நிலையில் நிகழாண்டில் அசாதாரண சூழல்களில் மாநில காவல் துறையை ஊக்குவிப்பதற்காக 5 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.