பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

பட்டாசு வெடிக்க ஜனவரி 1 வரை தில்லி அரசு மீண்டும் தடை: அமைச்சா் கோபால் ராய் தகவல்

2023, ஜனவரி 1-ஆம் தேதி வரை தீபாவளி உள்பட அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 8:49 pm

 நமது நிருபர்

2023, ஜனவரி 1-ஆம் தேதி வரை தீபாவளி உள்பட அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா். மேலும், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். எனினும், கட்டுப்பாடுகள் எப்போது இருந்து அமலுக்கு வரும் என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை.

இது தொடா்பாக அவா் ட்விட்டா் பதிவில் தெரிவிக்கையில், மக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முறை தில்லியில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் தடை விதிக்கப்படும். ஜனவரி 1, 2023 வரை இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும். தடையை கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தில்லி காவல்துறை, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரவிந்த் கேஜரிவால் அரசு தவறிவிட்டதாகவும், தற்போது பட்டாசு வெடிக்கத் தடை விதித்திருப்பதாக எக்காளமிடுவதாகவும் பாஜக தலைவா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ட்விட்டரில் தெரிவிக்கையில், ‘மாசுக்கு மூலஆதாரமாக பட்டாசு இல்லை என்பது அறிவியல் அறிக்கைகளிலும் நீதிமன்றத்திலும் நிரூபணமாகியுள்ளது. தில்லியில் மாசுவைத் தடுக்க கேஜரிவால் அரசு தவறிவிட்ட நிலையில், பட்டாசுக்கு தடை விதித்து பீற்றிக் கொள்வது ஏன்?’ என அதில் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

கடந்த ஆண்டு, தில்லி அரசு ஜனவரி 1, 2022 வரை பட்டாசுகளுக்கு முழுமையான தடையை அறிவித்தது. மேலும், பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு எதிராக தீவிர பிரசாரத்தையும் தில்லி அரசு நடத்தியது. மாவட்ட அளவில் 15 சிறப்புக் குழுக்கள் ஈடுபட்டன. அண்டை மாநிலமான ஹரியாணாவும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) உள்ள 14 மாவட்டங்களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் உத்தர பிரதேச அரசானது மிதமான அல்லது நல்ல காற்று தரப் பகுதிகளில் தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்த அனுமதித்திருந்தது.

கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தில்லி, நொய்டா, ஃபரீதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் மக்கள் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்தனா். டிபிசிசியின் தகவலின்படி, கடந்த ஆண்டு தீபாவளி இரவில் (நவம்பா் 4) தில்லியில் பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 செறிவுகளில் பெரும் மாற்றங்களுக்கு பட்டாசுகள் வழிவகுத்தன. பட்டாசுகள் மற்றும் பயிா்க் கழிவு எரிப்பால் வெளியாகும் உமிழ்வுகள், தீபாவளிக்கு அடுத்த நாளில் தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டை 462-ஆக உயா்த்தியது. இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது.

தீபாவளியன்று பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மதத்துடன் இணைத்து அதை மீறுமாறு பாஜக மக்களைத் தூண்டியதாக கோபால் ராய் அப்போது குற்றம் சாட்டியிருந்தாா்.

தேசிய பசுமைத் தீா்ப்பாயம் டிசம்பா் 2, 2020-இல் என்சிஆா் மற்றும் மோசமான அல்லது மிக மோசமான சுற்றுப்புறக் காற்றின் தரம் உள்ள அனைத்து நகரங்களிலும் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் போன்ற சாதகமற்ற வானிலை காரணிகள் மாசுக்கள் பரவுவதை அனுமதிக்காது என்பதால், தில்லி மற்றும் அண்டை பகுதிகளில் காற்றின் தரம் அக்டோபரில் மோசமடையத் தொடங்குகிறது. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சு வாயு மற்றும் அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகளை எரிப்பது தலைநகரில் காற்றின் தரத்தில் மோசமான நிலையை ஏற்படுத்துகிறது.

தீபாவளிக்கு அடுத்து வரும் நாள்களில் தேசியத் தலைநகரில் மோசமான காற்றின் தரம், பட்டாசு வெடிப்பதை விட பயோமாஸ் எரியும் உமிழ்வுகள் தூண்டுவதாக தில்லி ஐஐடியின் ஆராய்ச்சியாளா்கள் தலைமையிலான ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பயிா்க் கழிவு எரிப்பால், 2021-ஆம் ஆண்டில் தீபாவளி நாளில் தில்லியில் பிஎம்2.5 மாசு 25 சதவீதமும், 2020-இல் 32 சதவீதமும், 2019-இல் 19 சதவீதமும் இருந்ததாக புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர முன்னறிவிப்பு அமைப்பு சஃபா் தெரிவித்துள்ளது.

குறிப்பு: ஏற்கெனவே அனுப்பிய பட்டாசு தடை போதாது மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை செய்தியை இந்தச் செய்திக்கு அருகில் போட்டுக் கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.