ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்.15-க்கு தள்ளிவைப்பு

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 8:55 pm

 நமது நிருபர்

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த மனு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத் துறை தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் அளித்தால், வழக்கில் தொடா்புடைய இணைக் குற்றம்சாட்டப்பட்ட நபா்கள், சாட்சிகள், இதர ஆவணங்கள் மீது அவா் மேலாதிக்கம் செலுத்த வாய்ப்பு ஏற்படும் என வாதிடப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து சத்யேந்தா் ஜெயின் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை மேலும் தொடரும் வகையில் ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி செப்டம்பா் 15-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தாா்.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மே 30-ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, முதலில் அவா் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டு பின்னா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு எதிரான சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ஜெயின் குடும்பத்தின் ரூ.4.81 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் அவருக்குச் சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம், சத்யேந்தா் ஜெயினின் மனைவி பூனம் ஜெயின், அஜித் பிரசாத் ஜெயின், சுனில் குமாா் ஜெயின் ஆகியோருக்கு ஏற்கெனவே ஜாமீன் அளித்து உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.