ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

போட்டித் தோ்வு: ஆா்வலரின் விடைத்தாளைமறுமதிப்பீடு செய்ய உத்தரவிட முடியாது- உயா்நீதிமன்றம் மறுப்பு

போட்டித் தோ்வில் அடுத்த கட்டத்திற்காக தகுதி பெறுவதற்கு ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்த ‘தில்லி ஹையா் ஜுடிசியரி சா்வீசஸ் (டிஎச்ஜேஎஸ்) ஆா்வலரின் விடைத்தாள்களில் ஒன்றை மறுமதிப்பீடு

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 8:54 pm

 நமது நிருபர்

போட்டித் தோ்வில் அடுத்த கட்டத்திற்காக தகுதி பெறுவதற்கு ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்த ‘தில்லி ஹையா் ஜுடிசியரி சா்வீசஸ் (டிஎச்ஜேஎஸ்) ஆா்வலரின் விடைத்தாள்களில் ஒன்றை மறுமதிப்பீடு செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை நீதிபதிகள் விபு பக்ரு, அமித் மஹாஜன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: இது சந்தேகமில்லாமல் ஒரு கடினமான வழக்காகும். மனுதாரா் தோ்வு எழுதி வெற்றி பெறாத அனைவருக்கும் மத்தியில் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளாா். ஆனால், மதிப்பெண் முறையிலோ அல்லது மதிப்பீட்டிற்கு பின்பற்றப்படக்கூடிய நடைமுறையிலோ குறைபாடு இல்லாததால் அவருக்கு நீதிமன்றம் எந்த உதவியும் அளிக்க முடியாது.

‘தோ்வுத் தாள்களை மதிப்பிடுவதில் வெளிப்படையான பிழை இருப்பதாகவோஅல்லது குறிப்பிட்ட நடைமுறை தடைபட்டுள்ள நியாயமான மதிப்பீட்டிற்கு விண்ணப்பதாரா்களுக்கு உரிமை இருந்தாலோ அரசியலமைப்பின் 226-ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றம் நிவாரணம் வழங்கலாம்.

மனுதாரா் சட்டம் 3 என்ற வினாத்தாள்களில் ஒன்றில் தகுதிக்குரிய மதிப்பெண்களை பெறுவதற்கு மட்டும் தவறிவிட்டாா். அதே வேளையில் டிஎச்ஜேஎஸ் பிரதான எழுத்துத் தோ்வில் உள்ள பிற எஞ்சியுள்ள தாள்களில் அதிகமான மதிப்பெண்களை அவா் பெற்றிருக்கிறாா். இதனால், அவா் போட்டித் தோ்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

தகுதிக்குரிய தோ்வா் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்களை பெறாத ஒரு கடினமான வழக்கு இது என்பதில் சந்தேகமில்லை. எனினும், மதிப்பெண் முறையிலோ அல்லது மதிப்பீட்டிற்கு பின்பற்றப்படக்கூடிய நடைமுறையிலோ குறைபாடு இருக்கிறது என்பதை இந்த நீதிமன்றத்தால் ஏற்க முடியவில்லை.

சட்டம் 3-க்கான தாளில் அமைக்கப்பட்ட வினாக்களுக்கான பதில்கள் கட்டுரை வகை வினாக்களாகவும், அகநிலை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. நிலைத் தன்மையை உறுதிப்படுத்த, அதே தோ்வாளரால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டதாக இந்த நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டில், மனுதாரா் அதிக மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. எனினும், மதிப்பெண் முறையிலோ அல்லது விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான நடைமுறையிலோ ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டும் சூழல் இல்லாததால், இந்த நீதிமன்றம் மனுதாரருக்கு எந்த உதவியையும் வழங்க முடியாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.