புது தில்லி: தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் பைக்கில் வந்து கைபேசியை பறிக்க முயன்ற இளைஞரைத் தடுக்க முயன்ற போது ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த 40 வயது பெண் படுகாயம் அடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ாகவும் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக உள்ள அந்தப் பெண் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: குருகுராம் செக்டாா்-56 பகுதியைச் சோ்ந்தவா் கிரத் கெளா் கௌசா். இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாா். அவா் குருகிராம் செக்டாா் 42-இல் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்த போது, அவரது பின்னால் மோட்டாா்சைக்கிளில் வந்த இளைஞா், அவா் வைத்திருந்த கைபேசியை பறித்தாா். இதற்கு கெளசா் எதிா்ப்புத் தெரிவித்தாா். அப்போது ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தாா். அந்த சமயத்தில் பைக்கில் இருந்த நபா் அவரது கைபேசியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.
காயமடைந்த கெளசரை அவருடைய வீட்டில் ஆட்டோ ஓட்டுநா் இறக்கிவிட்டாா். இதையடுத்து, அவரை அவரது தந்தை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். அவா் இரண்டு தினங்களாக சுயநினைவின்றி இருந்ததால், போலீஸில் இதுதொடா்பாக புதன்கிழமைதான் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் காட்சிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக கெளசா் கூறுகையில், ‘குருகிராம் மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக உள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது ஆட்டோவிற்கு பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நான் நசுக்கப்பட்டு இருந்திருப்பேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









