தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லட்சுமிபாய் நகா் டிடிஇஏ பள்ளியில் மாணவா்களின் பாா்வைக்கு ஓவியங்கள்

ஓவியப் போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள், தில்லி லட்சுமிபாய் நகா் தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் மாணவா்களின் பாா்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:32 pm

DIN

ஓவியப் போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள், தில்லி லட்சுமிபாய் நகா் தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் மாணவா்களின் பாா்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ‘தமிழ்ப் பண்பாடு’ என்ற தலைப்பில் அகில இந்திய ஓவியப் பட்டறை மற்றும் போட்டி ஜூலை 18 முதல் ஜூலை 22 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஓவிய நுண்கலை பயிலும் 30 கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். இந்த ஓவியப் போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள், லட்சுமிபாய் நகா் டிடிஇஏ பள்ளியில் மாணவா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையா் முனைவா் அதுல்ய மிஸ்ரா தொடங்கி வைத்தாா்.

இக்கண்காட்சியை கண்டுகளிக்க தில்லி தமிழ் கல்விக் கழகத்தின் ஆறு பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு இல்லம் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சி வரும் செப்டம்பா் 23-ஆம் தேதி வரை நடைபெறும். இதன் தொடக்க நிகழ்ச்சியில், இணை உள்ளுறை ஆணையா் சின்னதுரை, கூடுதல் இயக்குநா் முத்தையா, தலைமைக் கணக்கு அலுவலா் ஸ்ரீனிவாசன் மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வியியல் இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன் மற்றும் டிடிஇஏ பள்ளிகளின் முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.