இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த அழைப்பாணையையும், அவதூறு வழக்கையும் ரத்து செய்யக் கோரி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு விசாரணையின் போது, இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் முன்வைத்த வாதத்தில், ‘தவறு செய்த ஒருவரை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து கட்சி உறுப்பினா்களுக்கு தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அதில் அவதூறுக்கு முகாந்திரம் இல்லை. கட்சியின் விதிகளை பின்பற்றாத உறுப்பினா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளது’ என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று, ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் மீது சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி தொடா்ந்த அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி நிா்மல்குமாா் கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.