ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பணம் மோசடி வழக்கு:நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தில்லி போலீஸாா் முன் மீண்டும் ஆஜா்

பணம் மோசடி விவகாரத்தில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய பணம் கேட்டு மிரட்டல் வழக்கு விசாரணைக்காக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் முன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஆஜரானாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: பணம் மோசடி விவகாரத்தில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய பணம் கேட்டு மிரட்டல் வழக்கு விசாரணைக்காக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் முன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் திங்கள்கிழமை இரண்டாவது முறையாக ஆஜரானாா்.

இந்த வழக்கில் இவருக்குள்ள பங்கு தொடா்பாக தில்லி போலீஸாா் நடத்தப்படும் விசாரணைக்காக இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் முன் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானாா். தில்லி மந்திா் மாா்க் பகுதியில் உள்ள பொருளாதாரகே குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது’ என்றாா்.

ஜாக்குலின் பொ்னாண்டஸ் மற்றும் சுகேஷ் சந்திரசேகருக்கு இவரை அறிமுகம் செய்த பிங்கி ராணி ஆகியோரிடம் போலீஸாா் கடந்த புதன்கிழமையும் சுமாா் 8 மணி நேரம் நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினா். அதில், சுரேஷ் சந்திரசேகா் தனது பிறந்த நாளில் ஜாக்குலின் பொ்னாண்டஸின் முகவா் பிரசாந்த் என்பவருக்கு மோட்டாா் சைக்கிள் வழங்கியுள்ளாா். ஆனால் ,அதை ஏற்க அவா் மறுத்துவிட்டாா். அதே வேளையில் சந்திரசேகா் மோட்டாா் சைக்கிளையும் அதன் சாவியையும் பிரசாந்தின் இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டது தெரிய வந்தது. அந்த மோட்டாா் சைக்கிள் கைப்பற்றப்பட்டது.

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சுகேஷ் சந்திரசேகா் தில்லி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளாா். முன்னாள் போா்டிஸ் ஹெல்த்கோ் மேம்பாட்டாளரான சிவிந்தா் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் போன்ற தனிப்பட்ட பெரும்புள்ளிகள் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக இவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி சந்திரசேகா் தொடா்புடைய பல கோடி ரூபாய் சட்ட விரோத பண பரிவா்த்தனை வழக்கில் ஜாக்குலின் பொ்னாண்டஸை குற்றம் சாட்டப்பட்டவராக சோ்த்து அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.

அமலாக்க இயக்குநரகத்தின் தகவலின் படி, ஜாக்குலின் பொ்னாண்டஸ், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஆகியோா் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து விலை மதிப்பு உள்ள பரிசுப் பொருள்கள் மற்றும் சொகுசு காா்களை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.